Home உலக செய்திகள் வீட்டிலே 3 கஞ்சா செடி வளர்க்கவும் தினம் 25கிராம் பாவிக்கவும் அனுமதி

வீட்டிலே 3 கஞ்சா செடி வளர்க்கவும் தினம் 25கிராம் பாவிக்கவும் அனுமதி

ஒருவர் தனிப்பட்ட முறையில் வீட்டிலே 3 கஞ்சா செடி வரை வளர்க்கலாம் மற்றும் தினமும் 25 கிராம் வரை உபயோகிக்கலாம் என ஜெர்மனி நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ளது.

ஜெர்மனியில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய நாடாளுமன்றம் இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

கஞ்சா உபயோகத்தை சட்டரீதியாக ஒப்புகொள்ளும் இந்த சட்டத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், அரச தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் தனிநபர், சட்டம் கொடுத்த உரிமையுடன் வீட்டிலேயே 3 கஞ்சாசெடிகள் வரை வளர்க்கலாம்.

வீட்டிலே 3 கஞ்சா செடி வளர்க்கவும் தினம் 25கிராம் பாவிக்கவும் அனுமதி - Dinamani news - வீட்டிலே, கஞ்சா செடி, வீட்டிலே 3 கஞ்சா செடி

மேலும், ஒருவர் சுமார் 25 கிராம் வரை கஞ்சாவை தினமும் எடுத்துகொள்ளலாம்.

கஞ்சா எடுத்துகொள்வதற்கு என்று ஒரு குழு அமைக்கப்படும் அதில் உறுபினர்கள் மட்டுமே சட்டபூர்வமாக கஞ்சா எடுத்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் சமீபக்காலமாக கஞ்சா உட்கொள்ளுதல் இளைஞர்களில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கருப்பு சந்தையில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.

அதனை தடுத்து சட்டபூர்வமாக்கும்போது, விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த சட்டத்திற்கு நாட்டில் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மால்டா மற்றும் லக்சம்பர்க் நாடுகளை தொடர்ந்து தற்போது ஜெர்மனியும் கஞ்சா உபயோகத்தை சட்டரீதியாக அங்கீகரித்தது பல்வேறு பகுதிகளில் இருந்து எதிர்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நெதர்லாந்து நாடும் கஞ்சாவை சட்டபூர்வமாக அங்கீகரிக்க முனைப்பு காட்டுகிறமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version