யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரை பார்வையிட வந்தவரை வைத்தியசாலை காவாலாளிகள் பரிசோதித்தபோது கஞ்சா கலந்த பீடி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கைதானவர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
தனது திருமணத்துக்குத் தேவையான பணத்தைத் தேடிக் கொள்வதற்காக கஞ்சா விற்பனை செய்த ஓபத்த கொட்டுகொட பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரும் அவருக்கு உறுதுணையாக இருந்த தாயாரும் ஜா -எல பொலிஸ் நிலைய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2 கிலோ 170 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. 24 வயதுடைய சந்தேக நபருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதற்கு 15 இலட்சம் ரூபா பணம் தேவைப்படுவதாகவும் பணத்தைப் பெற்றுக்கொள்ள முறையான வழியில்லாததால் தனது தந்தையிடமிருந்து பெறப்பட்ட […]
ஒருவர் தனிப்பட்ட முறையில் வீட்டிலே 3 கஞ்சா செடி வரை வளர்க்கலாம் மற்றும் தினமும் 25 கிராம் வரை உபயோகிக்கலாம் என ஜெர்மனி நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ளது.
ஜெர்மனியில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய நாடாளுமன்றம்...
அளுத்கம பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த போதைப்பொருட்களை விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அளுத்கம பிரதான பாடசாலையொன்றின் மாணவர்கள் சிலர் போதைப்பொள் கலந்த பானங்களை குடிப்பதாக அளுத்கம பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அளுத்கம நகரில் உள்ள கடையொன்றின் உரிமையாளரை விசேட பொலிஸ் குழுவினர், முகவராகப் பயன்படுத்திச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது நகரின் பிரதான பாடசாலைக்கு அருகாமையில் இயங்கி வந்த கடையில், கஞ்சா கலந்த பானங்கள் விற்பனை செய்வதாகத் தெரிய […]
யாழ்ப்பாணத்தில் நேற்று போதைப்பொருள் பாவனையால் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் வாங்க தாயார் பணம் கொடுக்காததால் 30 வயது இளைஞன் உயிரை மாய்த்துள்ளார். நீண்டநாளுக்கு பின்னர் போதைப்பொருள் பாவித்த 26 வயதான இளைஞன் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களை கலந்து அதிகளவில் உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் வாங்க தாயார் பணம் கொடுக்காததால் 30 வயதானவர் உயிரை மாய்த்த சம்பவம் மல்லாகத்தில் நடந்தது. அந்த இளைஞன் போதைப்பொருள், போதை மாத்திரைகளுக்கு அடிமையானவர். போதைப்பொருள் குற்றம் தொடர்பில் சிறைச்சாலையிலிருந்தவர் அண்மையில்தான் விடுதலையாகியிருந்தார். […]
ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சா பயிரிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவினால் அமைச்சரவையில் இந்தப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சரவையின் அனுமதி கிடைத்தமையால் மகிழ்ச்சியடைகின்றேன் என்று டயனா கமகே தெரிவித்துள்ளார்.
யாழ் அரச திணைக்களம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் 31 வயதான இளம் பெண் ஒருவர், கருக்கலைப்பின் போது கடுமையான இரத்தப் போக்கு காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
யாழில்...
யாழ்ப்பாண இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் உரும்பிராய் பிரதேசத்தில் 80 கிலோகிராம் அளவிலான கேரளா கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்துள்ளனர்.
இந்த கேரள கஞ்சாவானது இந்தியாவில்...
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியிலுள்ள வீடொன்றின் கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கோடியே 32 இலட்சம் பெறுமதியான 68 கிலோ 305 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் தலைமையகத்திற்கு...
கிளிநொச்சி நீதிமன்றத்தில் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கிராம் கஞ்சாவை திருடிய நால்வர் இன்றையும் தினம் கைது நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த மாதம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் சான்றுப்படுத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்பு பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உப்புல செனவரத்தினவின் கீழ் இயங்கி வருகின்ற மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரின் பொறுப்பதிகாரி பி.ஐ.மங்கள தலைமையிலான பொலீஸார் இரகசிய தேடுதலை மேற்கொண்டிருந்த வேளையில் இந் நால்வரும் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் நீதிமன்ற பணியாளர். இருவர் நீதிமன்ற சுத்திகரிப்பு மேற்பார்வையாளர்கள். கைதானவர்களில் மூன்று பேர் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள். கைதான நீதிமன்ற பணியாளர் அம்பாறையை சேர்ந்தவர். நீதிமன்ற களஞ்சிய அறையை உடைத்து கஞ்சா திருடி, அதனை விற்பனை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...