குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டவுடன் வைத்தியர் பரிந்துரையின்றி மருந்துகளை வழங்கக்கூடாதென தேசிய நச்சு தகவல் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்த்தன அறிவுறுத்தியுள்ளார்.
குழந்தைகளுக்கு பரசிட்டமோல் அதிகளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வைத்தியரின் பரிந்துரைகளில் பரசிட்டமோல் இருந்தால் மட்டுமே மருந்தை கொடுக்க வேண்டும். எனினும் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது அதிகளவு பரசிட்டமோல் கொடுக்கப்படுவதால் குழந்தைகளின்
நிலை மேலும் மேசமான நிலைக்குள்ளாகும் வாய்ப்புள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டார். சில பெற்றோர் காய்ச்சல் கண்டறிந்தால் பரசிட்டமோலை அதிகளவில் கொடுக்கின்றனர். இவர்களுக்கு மருத்துவ ஆலோசனைப்படி திட்டமிடப்பட்ட அளவு மருந்தையே வழங்க அறிவுறுத்துவதாகவும் அவர் கூறுகிறார். குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் குழந்தைக்கு பரசிட்டமோல் மருந்து கொடுக்க வேண்டுமா? என்றும், மேலும் குழந்தைக்கு கூடுதல் டோஸ் பரசிட்டமோல் கொடுக்க வேண்டுமா ? என்றும் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக ஏதேனும் மேலதிக ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள 0112 686 143 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்த முடியுமென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
The post வைத்தியர் பரிந்துரையின்றி மருந்துகளை வழங்காதீர்கள் appeared first on Tamilwin news.