Home jaffna news 07 குடியிருப்பாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் தண்டம்

07 குடியிருப்பாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் தண்டம்

யாழ்ப்பாணம்-கொக்குவில் பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த 07 குடியிருப்பாளர்களுக்கு தலா 20, 000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து, டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கொக்குவில் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின்போது, டெங்கு நுளம்பு பெருகும் சூழலுடன் சுற்றாடலை வைத்திருந்த 07 பேருக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு புதன்கிழமை (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 7 பேரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, அவர்களை கடுமையாக எச்சரித்த மன்று, அவர்களுக்கு தலா 20,000 ரூபாய் தண்டம் விதித்துள்ளது.

Exit mobile version