இலவச விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போது 38 நாடுகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்நாட்டின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்துக்கு இது மிகவும் நல்ல முடிவாக இருக்குமென அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றம் நேற்று (3) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியபோது, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.