8 வயது தமிழ் சிறுமி கடத்தி-துஸ்பிரயோகத்தின் பின் கொலை-மூட்டையாக கட்டி கால்வாயில் வீசிய கொடூரன்..!

புதுச்சேரி சோலைநகர் பகுதியை சேர்ந்த ஒன்பது வயது சிறுமியான ஆர்த்தி கடந்த 2ஆம் திகதி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.

பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த நிலையில் எந்த பதிவும் கிடைக்காத காரணத்தினால் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்ததையடுத்து குறித்த பிரதேசத்தில் காணப்பட்ட கழிவுநீர் வாய்க்காலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

சோதனையிட்ட பொலிஸார் வாய்க்காலில் வேட்டியால் கட்டிய மூட்டை ஒன்றினுள் காணாமல் போன சிறுமியின் உடல் இருப்பதை கண்டறிந்தனர்.

காணாமல் போன சிறுமியை கொலை செய்து கை, கால், வாயை கட்டி மூட்டையாக வீசியிருந்தமை தெரியவந்தது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நீதி கோரி ஆங்காங்கே பல ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

புதுச்சேரி சிறுமி படுகொலை விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.