இன்றைய ராசிபலன் : 31 ஆகஸ்ட் 2024 – Horoscope Today
Today Horoscope இன்றைய ராசி பலனை (ஆகஸ்ட் 31, 2024 சனிக் கிழமை) இன்று சந்திரன் பகவான் கடகம் ராசியில் பூசம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று தனுசு ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.
இன்றைய ராசிபலன் : 31 ஆகஸ்ட் 2024 – Horoscope Today
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 31, 2024, குரோதி வருடம் ஆவணி 15, சனிக் கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள மூலம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பணிகள் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நீண்ட கால விருப்பங்கள் நிறைவேறும். இன்று விருந்து, விழாக்களை ஏற்பாடு செய்வீர்கள். உங்களின் புகழும், நற்பெயரும் அதிகரிக்கும். பணியிடத்தில் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தேவையற்ற மனக்கசப்புகள் ஏற்படும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதக பலன் தரக்கூடிய நாள். அரசு வேலை தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இடத்தில் மேலே அதிகாரிகளின் உறவு மேம்படும். நண்பர்கள் விஷயத்தில் மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன் தரக்கூடிய நாள். பணியிடத்தில் சூழல் சிறப்பாக இருக்கும். இந்த லாபத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அரசியல் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வணிகம் தொடர்பான புதிய திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள். இன்று மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான பிரச்சனைகள் ஆசிரியர்கள் மூலம் தீரும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. எந்த வேலை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கும் முயற்சி செய்வீர்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தொடர்பாக மும்முரமாக இருப்பீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு இல்லாத சூழல் இருக்கும். வேலையில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பேச்சு, நடத்தையில் கவனமாக இருக்க வேண்டிய நாள். உத்தியோகஸ்தர்கள் எதிரிகளிடம் கவனம் தேவை. இன்று உங்களின் இலக்கை அடைவதில் சிரமம் ஏற்படும். மாலை நேரத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டு. வணிகஸ்தர்கள் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நன்மைகள் அதிகமாக நடக்கக் கூடிய நாள். மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். வேலை தொடர்பாக புதிய திட்டமிடல் சிறப்பான பலனைத் தரும். இன்று அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சுமாரான பலனை தரக்கூடிய நாள். வேலை அல்லது வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக குடும்பத்திலிருந்து தகராறுகள் தீரும். குடும்பச் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் சில வாய்ப்புகள் பெறுவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டிய நாள். அன்றாட வேலைகளை முடிப்பது தொய்வு ஏற்படும். சிறு வணிகர்களுக்கு நிதி நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். இன்று நிதி நெருக்கடியை சந்திக்க வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரம் தொடர்பாக ரெஸ்ட் எடுப்பதைத் தவிர்க்கவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சாதாரணமான நாளாக இருக்கும். அன்றாட வேலைகளையும், பணிகளையும் முடிப்பதில் கவனம் செலுத்தவும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். இன்று ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்ய வேண்டிய சூழல் இருக்கும் என்பதால் கவனம் தேவை. இன்று எந்த ஒரு முடிவையும் புத்திசாலித்தனத்துடன் எடுக்கவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உடல் உஷ்ணம் தொடர்பான உடல்நல பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். அதில் கவனம் தேவை.. குடும்ப விஷயத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். பருவ கால நோய்கள் பாதிக்க வாய்ப்புள்ளது. உங்களின் உணவு மற்றும் பானங்களில் கவனம் தேவை. வெளி உணவுகளை தவிர்க்கவும். பிள்ளைகளின் புதிய தொழில் தொடங்குவது தொடர்பாக யோசிப்பீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளில் இருந்து புத்திசாலித்தனமாக மீள்வீர்கள். இன்று உங்களின் பேச்சு, செயலில் இனிமையை கடைப்பிடிக்கவும். தொழில் தொடர்பாக நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் சிறப்பான பலனைத் தரும்