பெண் உறுப்பால் ஆண்களுக்கு ஏற்படும் தொற்றும் நோய்கள்

பெண் உறுப்பால் ஆண்களுக்கு ஏற்படும் தொற்றும் நோய்கள்

பெண்கள் புணர்ச்சி அதிகமாகி சூடேறி உடல் வெந்து புண்ணாகுவதனாலும், குழியான பகுதிகளில் படுத்து தூங்குவதால் வாய்வு தங்குவதாலும், மாதவிடாய் நாட்களில் புணருவதாலும், பல ஆண்களை சேருவதாலும், கட்டாய புணர்ச்சியினாலும், பெண்களின் யோனியில் ஏற்படும் நோய்கள் 20 வகைப்படும்.

வாதயோனி

பெண்குறியில் வாய்வு தங்கி இரத்தம் சேர்ந்து தோல் கறுப்பாக காணும். பெண் குறியில் கிருமி காணும். உடம்பு வியர்க்கும், பெண்குறியிலிருந்து நுரை வெளியே தள்ளும். சில வேளை சிவப்பு நிறம் காணும். பெண்குறியிலிருந்து சூடாக இரத்தம் வெளியேறும். அடிவயிறு கனக்கும். இரண்டு காலுக்கும் இடைப்பட்ட பகுதியில் வலி காணும். இது வாத யோனி நோயின் குறி குணம் ஆகும்.

பெண் உறுப்பால் ஆண்களுக்கு ஏற்படும் தொற்றும் நோய்கள் - Dinamani news - பெண் உறுப்பால், பெண் உறுப்பால் ஆண்களுக்கு, பெண் உறுப்பால் ஆண்களுக்கு ஏற்படும் தொற்றும் நோய்கள், பெண்குறி, பெண்குறியில்

மருந்து

பறங்கிப்பட்டை, வாய் விளங்கம், மிளகு, இலவங்கப்பட்டை, அதிமதுரம், சுக்கு, சடமாஞ்சி, சாதிபத்திரி, சீரகம் வகைக்கு சமன் 5 கிராம் வீதம், முத்தெண்ணெய் 750 மில்லி முதிர் மெழுகு பதத்தில் வடித்து ஒரு வேளை 10 மில்லி வீதம் தினசரி 2 வேளையாக 7 நாட்கள் கொடுக்கவும். 7 நாட்கள் மருந்து கொண்ட பின் பெருங்காயம், சுக்கு, ஓமம் சம அளவு எடுத்து வேப்பின் இலைச்சாற்றில் அரைத்து குழம்பாக்கி அடிவயிறு, யோனி பகுதியை சுற்றி பூசவும்.

பித்த யோனி

பித்த யோனி நோயாளருக்கு பெண்குறியில் நாற்றம் காணும். இடுப்பு, கறுப்பு, மஞ்சள், சிவப்பு ஏதேனும் நிறத்தில் இருக்கும். பெண் குறியிலிருந்து இரத்தம் வெளியேறும். தாகம், சுரம், காணும். சூடான மூச்சுக்காற்று வெளியேறும். உடம்பிலிருந்து துர்வாசம் வீசும்.

மருந்து

சோம்பு, மிளகு, ஏலம், தக்கோலம், வில்வ இலை 10 கிராம் வீதம் எடுத்து 1.5லிட்டர் தண்ணீரில் கசாயம் விட்டு 180 மில்லியாக்கவும் கசாயத்தில் எருக்கலம் பால் 3 மில்லி மேல் பொடியாக விட்டு 2 வேளையாக 12 நாட்கள் கொடுக்கவும்.

கந்தகம், படிகாரம் சம அளவு எடுத்து வேப்பின் எண்ணெயில் அரைத்து குழம்பாக்கி பெண் குறியில் பூச சீழ் வடிதல், இரத்தம் வெளியேறுதல், துர் வாசம் வீசுதல், அழல் இவைகள் மாறும்.

சிலேற்பன யோனி

உடல் அதிக குளிர்ச்சி காணும். மேகம் வெளியேறும். உடம்பில் ஆங்காங்கே தடிப்பு காணும். உடல் வலி காட்டும். பெண் குறி விளறும். பெண்குறியிலிருந்து நீர் கசிவு அதிகமாக இருக்கும். இவைகள் சிலேற்பன யோனி நோயின் குணங்கள் ஆகும்.

மருந்து

குமரியின் இளம் சோறு, பேரீச்சம் பழம், மாச்சீனி வகைக்கு 600 கிராம் லேகியமாக்கி சாப்பிடவும். கற்பூரம், சாம்பிறாணி, சாதி லிங்கம் வகைக்கு சமன் எடுத்து திராவகம் இறக்கி பெண் குறியில் பூசும் போது சிலேற்பன யோனி நோய் குணம் ஆகும்.

இரத்த யோனி

பெண்குறி வழியாக இரத்தத்துடன் சீழ், நீர், இவைகள் நுரையுடன் வெளியேறி வலிக்கும். தசைப்பகுதி குத்தி வலிக்கும். மஞ்சள் கலந்த கபம் வெளியேறும். பெண்குறியில் புழு உருவாகி வெளிப்பகுதியில் செதில்கள் தோன்றி மஞ்சள் நிறத்தில் நீர் சுரக்கும்.

மருந்து

கார்கோல் அரிசி, பவளம், வெண் குங்கிலியம் வகைக்கு சமன். சாணி சுட்ட சாம்பல் மேற்படி மருந்துகளின் எடைக்கு எடுத்து ஒன்றாக்கி 3 கிராம் அளவு எடுத்து ஆவின் நெய்யில் குழப்பி தினசரி 2 வேளை வீதம் 12 நாட்கள் கொடுக்கவும்.

வேப்பின் எண்ணெய் 180 மில்லி துரிசு 4 கிராம், வெண் குங்கிலியம், படிகாரம் வகைக்கு ஒரு கிராம் வீதம் சேர்த்து காய்ச்சி பெண் குறியில் போடவும்.

உபத்திரவ யோனி

பெண்குறியின் வெளிப்பகுதியில் உள்ள தோல் நைந்து பஞ்சடித்த களம் போல் ஆகும். யோனியின் மேல் பகுதி திரை விழுந்து சதை உப்பலாகும். பெண்குறியின் வாய்ப்பகுதி சுருங்கி விளறும். வாய்வின் காரணத்தினால் உளைச்சல், குத்தல் காணும்.

பெண் உறுப்பால் ஆண்களுக்கு ஏற்படும் தொற்றும் நோய்கள் - Dinamani news - பெண் உறுப்பால், பெண் உறுப்பால் ஆண்களுக்கு, பெண் உறுப்பால் ஆண்களுக்கு ஏற்படும் தொற்றும் நோய்கள், பெண்குறி, பெண்குறியில்

மருந்து

ஆமணக்கெண்ணெய், தேங்காய்பால் வகைக்கு 375 மில்லி. வெள்ளறுகின் சாறு 750 மில்லி. எவச்சாரம், நவச்சாரம், சத்திச்சாரம் வகைக்கு 15 கிராம். ஒன்றாக்கி முதிர் மெழுகு பதத்தில் காய்ச்சி ஒரு வேளை 10 மில்லி வீதம் தினசரி 2 வேளை 12 நாட்கள் கொடுக்க உபத்திரவ யோனி நோய் மாறும்.

இரத்த சீழ் யோனி

பெண்குறியில் உளைச்சல், குத்தல் காணும். சீழுடன் சேர்ந்த இரத்தம் நாற்றத்துடன் வெளியேறும். ஆங்காங்கே விரணம் காணும். பெண்குறியின் மேல்பகுதியில் விரணம் பரவி தொலை தூரம் நடக்க முடியாது .

மருந்து

நன்னாரி, பறங்கிப்பட்டை, முத்தக்காசு, வால்மிளகு, தேவதாரம், சுக்கு, நிலப்பனை கிழங்கு, நீரோட்டி விதை வகைக்கு 60 கிராம். உப்பு 5( இந்துப்பு, கறியுப்பு, கல்லுப்பு, வெடியுப்பு, மூங்கிலுப்பு) வகைக்கு 5 கிராம் வீதம் முத்தெண்ணெய் 250 மில்லி ஒன்றாக்கி முதிர் மெழுகு பதம் வடித்து 10 மில்லி வீதம் தினசரி 2 வேளை 12 நாட்கள் கொடுக்க இரத்த சீழ் யோனி நோய் மாறும்.

கொதிப்பு யோனி

கற்பிணிகளுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும். பெண்குறி சூடாக இருக்கும். கடுப்புடன் இரத்தம் வெளியேறும். பிறக்கும் குழந்தைக்கு சூடு தங்கி சய நோய், விஷ நோய் போன்ற கொடிய நோய்கள் காணும்.

மருந்து

நவநீத பற்பம், முத்து, கொம்புகல்நார், சங்கு, பலகறை, மான்கொம்பு, பவளம், கல்மதம், பால் கருடப்பச்சை வகைக்கு சமன், வெடியுப்பு செயநீரால் அரைத்து கெசபுடம் போட நீறும். தாமரைப்பூ மணப்பாகில் 500 மில்லி கிராம் வீதம் தினசரி 2 வேளை 15 நாட்கள் கொடுக்க கொதிப்பு யோனி நோய் மாறும்.

சூலை யோனி

புணர்ச்சி காலத்தில் படுக்கும் இடம் மேடும் பள்ளமுமாய் இருப்பதாலும், அதிக புணர்ச்சியாலும், கருக்குழியில் வாய்வு தங்கி, பெண் குறியானது விரிய முடியாத அளவு ஆகி நரம்புகளில் சீழ் தங்கி வலியுடன் சூலை காணும்.

மருந்து

எள்ளெண்ணெய், பெண்குறியின் மீது போட்டு காலையிலும்,மாலையிலுமாக பதமாக கையால் தடவல் முறை செய்யவும், ஏழிலைப்பாலை இலை போட்டு வெந்நீர் காய்ச்சி ஒரு மாதம் ஒற்றல் போட்டு எந்த விதமான வேலையும் செய்யாமல் ஓய்வாக இருந்தால் இந்நோய் மாறும்.

உலர் யோனி

மாதவிடாய் நாட்களில், அதிக புணர்ச்சி விருப்பத்தால் சிறுநீர் சரியாக வெளியேறாமல் சிக்கல் தோன்றும். பெண் குறி உலர்ந்து போகும். பல்வேறு நோய்களை உருவாக்கி வாழ்நாள் முழுதும் இந்நோய் காணும்.

மருந்து

வெண் காரம், சவுக்காரம், பொட்டிலுப்பு, படிகாரம், இந்துப்பு மண் சட்டியில் போட்டு இவைகளை பொரித்து கொள்ளவும். மிளகு, சுக்கு 30 கிராம் வீதம். இளநீர் 1.5 லிட்டரில் கசாயம் வைத்து 180 மில்லியாக்கி அதை 2 வேளையாக மேற்படி மருந்தில் 2 கிராம் அளவு சேர்த்து கொடுக்க உலர் யோனி நோய் மாறும்.

கோழை யோனி

குழந்தை பெற்ற ஆறாம் அல்லது ஏழாம் நாளில் வாய்வின் காரணத்தினால், கருப்பைக்குள் கபம், கோழையைப் போல் விழுந்து, பல நோய்களைக் காட்டி, பெண்குறி வழியாக வாந்தி எடுத்தது போல் கோழை வெளியேறும்.

மருந்து

கற்பூரம், சாம்பிறாணி, சாதி லிங்கம், சம அளவு எடுத்து சிறுதேன் விட்டு அரைத்து, குழம்பாக்கி ஒரு வேளை 2.5 கிராம் வீதம் தினசரி 2 வேளை 3 நாட்கள் கொடுக்க கருப்பைக்குள் தங்கிய அழுக்குடன் கோழை எல்லாம் வெளியேறும். வாய்வு, பெண்குறி நோவு, குமட்டல், வாந்தி இவைகளும் மாறும்.

சிவப்பு யோனி

வாத பித்த கபத்தினால் பெண் குறியினுள் இரத்தம் தங்கி, அந்த இரத்தத்தின் ஈரம் காய்ந்து சிவந்த நிறமாகி பெண்குறி எரிச்சலுடன் சுருங்கி காணும். இரத்தமும் வடியும். இடுப்பு உளைவு, நீர் தரிப்பு, இவைகளும் காணும்.

மருந்து

படிகார செந்தூரம் படிகாரம் 600 கிராம், சலாசத்து, பவளம், வங்கம் வகைக்கு 60 கிராம். குமரிச்சாறு விட்டு அரைத்து 5 முறை குக்கிடப்புடம் போட செந்தூரமாகும். 250 மில்லி கிராம் அளவு வெண்ணெயில் கொடுக்க சிவப்பு யோனி நோய் மாறும்.

பெண் உறுப்பால் ஆண்களுக்கு ஏற்படும் தொற்றும் நோய்கள் - Dinamani news - பெண் உறுப்பால், பெண் உறுப்பால் ஆண்களுக்கு, பெண் உறுப்பால் ஆண்களுக்கு ஏற்படும் தொற்றும் நோய்கள், பெண்குறி, பெண்குறியில்

வடி யோனி

அதிக புணர்ச்சியின் காரணத்தாலும், புணர்ச்சி வேளையில் ஏற்படும் தும்மலையும், ஏப்பத்தையும் அடக்கி கொள்வதாலும், பெண் குறியில் வலி ஏற்பட்டு கறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இரத்தம் வெளியேறும். மலம் உலரும். குமட்டல், அடிவயிற்றில் குத்தல் காணும். இது வடி யோனியின் குறி குணங்கள் ஆகும்.

மருந்து

லேகியம், அதிமதுரம், வசம்பு, சுக்கு, சிறுநாகப்பூ, அதிவிடையம், ஏலம், மாசிக்காய், தான்றிக்காய், முத்தக்காசு, கற்கடக சிங்கி, இலவங்கப்பட்டை, கசகசா, சாதிக்காய், பறங்கிப்பட்டை, சிற்றரத்தை, மாவிலங்கம் பட்டை, நன்னாரி, சீரகம் வகைக்கு 10 கிராம் வீதம் வறுத்து சூரணமாக்கவும். மாச்சீனி 180 கிராம் ஆவின் பால் 375 மில்லி பாகாக்கி ,மேற்படி சூரணத்தை தூவி நெய், தேன் 180 மில்லி வீதம் சேர்த்து லேகிய பதத்தில்,10 மில்லி எருக்கலம் பால் சேர்த்து இறக்கி, தினசரி 2 வேளை 3 கிராம் வீதம் மண்டலம் சாப்பிட வடியோனி நோய் மாறும்.

மகாயோனி

பெண்குறியில் வாய்வு தங்கி நாளுக்கு நாள் கற்பப்பை பெரிதாகி கொண்டே வரும். வயிறு வலி காணும். பெண்குறியில் மாமிசம் அதிகம் காணும். பெண்குறி விரிந்து பெரிதாகி வலியோடு கபம் வெளியேறும். வாய் பிதற்றல் காணும். நோயாளிக்கு அதிக தூக்கம் வரும். இது மகா யோனி நோயின் குறி குணம் ஆகும்.

மருந்து

அய செந்தூரம், இரும்பு, கந்தகம், வகைக்கு பலம் 10. கரிசாலை சாறு விட்டு அரைத்து, சிறு வில்லைகளாக்கி, சட்டியில் வைத்து மேல் சட்டி மூடி சீலைமண் செய்து, 12 மணி நேரம் தீ எரித்து, ஆறினபின் எடுத்து மீண்டும் கையான் சாறு விட்டு அரைத்து, வில்லையாக்கி சட்டியில் வைத்து மேல் சட்டி மூடி, 12 மணி நேரம் எரிக்கவும். இப்படி 10 முறை செய்ய நல்ல செந்தூரமாகும். சிறுதேனில் 200 மில்லி கிராம் வீதம் தினசரி 2 வேளை ஒரு மண்டலம் கொள்ள வாய்வு, இரத்தக்கட்டு, பெண்குறியில் ஏற்படும் மாமிச திமிர்ப்பு, வலி, குத்தல் போன்றவைகளும் மாறும்.

போஜக யோனி

மங்கையர்க்கு கற்பக்காலத்தில் கற்ப பையில் தங்கும் விந்துவானது சூடாகி பெண்குறி வெந்து புண் போல் ஆகும். காலப்போக்கில் பெண்களின் கொங்கை அயர்ந்து போகும். புருஷன் மீது இச்சை இருக்காது. கனவில் கூட கணவன் மீது விருப்பம் இருக்காது, இது போஜக யோனியின் குறி குணங்கள் ஆகும்.

மருந்து

கல்யாணி கிறுதம், கூழ் பாண்டச் சாறு, 750 மில்லி. பூமிசர்க்கரைகிழங்கு, நன்னாரி சூரணம் வகைக்கு 750 கிராம். பனைவெல்லம் 375 கிராம் பாகாக்கி நெய், தேன் வகைக்கு 375 மில்லி சேர்த்து, ஒரு வேளை 3 கிராம் வீதம் தினசரி 2 வேளை எருக்கலம் பால் 10 துளி வீதம்சேர்த்து கொடுக்கவும். ஒரு மண்டலம் மேற்படி மருந்தை கொள்ளும் போது, அழகு உண்டாகும். மேனி தடிக்கும். சூடு மாறி உடல் குளிர்ச்சி அடையும். நரை திரைகள் மாறும். மருதம் பட்டை கசாயத்தில் மான் கொம்பை உரைத்து இரு தனங்களிலும் பூச கொங்கை பெரிதாகும். மருந்து சாப்பிடும் போது புணர்ச்சி கூடாது.

அதிசார யோனி

பெருத்த ஆண்குறி மூலம் பெண் போகம் செய்வதாலும், அதிக சம்போகத்தாலும், பெண் குறியில் வீக்கம் ஏற்பட்டு வலி அதிகம் காணும். அதிகமான போகத்தின் காரணத்தினால் உடல் வலு இழந்து அதிசார யோனி நோய் உருவாகும்.

மருந்து

புலியினுடைய கொழுப்பை உருக்கி எண்ணெய் ஆக்கி அந்த எண்ணெயில் குங்குமப்பூ இட்டு காய்ச்சி அதை பெண் குறியின் வெளியில் நன் றாக பூசவும். பெண்குறியின் வீக்கம் குறைந்து விரிந்து கொள்ளும் தன்மை உடையது ஆகும். நன்னாரிமணப்பாகு கொடுக்க, உடல் குளிச்சியடைந்து பெண்குறி விரிவடையும்.

வாத தூலியோனி

வாத தன்மையுடைய பொருட்க ளை அதிகமாக உண்பதினாலும், அதிக புணர்ச்சி செய்வதாலும், வாய்வு தங்கி அந்த வாயுவின் கார ணத்தினால் உடம்பை பெருகச் செய்யும். பெண்குறியின் துவாரத்தை அடைத்து கொள்ளும். இது வாத தூலி யோனியின் குணம் ஆகும். இந்நோய் கடினமானது ஆகும்.

மருந்து

மண்டூர செந்தூரம், சீனக்காரம், இரும்பு, மண்டூரம் வகைக்கு 60 கிராம் வீதம் பொற்றி லைக் கையான் சாறு விட்டு அரைத்து, வில்லை செய்து குக்குடப் புடம் போடவும். இவ்வாறு 50 புடம் போட செந்தூரமாகும். 200 மில்லி கிராம் அளவு தேனில் மண்டலம் சாப்பிட்டு பெண்குறியில் தக்கை போட்டு துளையை ஏற்படுத்தவும். துளை பெரிதாகி வரில் நோய் சாத்தியமாகும். மிக கவனமாக கையாளவும்.

இறுது கால யோனி

மாதவிடாய் காலங்களில் போகம் செய்வதால் வெளியேற வேண்டிய உதிரமானம் கட்டுப்பட் டு, பெண் குறியின் நிறம் மாறி, வெளியே றும் இரத்தம் கலங்கி, பெண் குறி குத்தி வலித்து நோய் உண்டா கும். இளம் உதிரம் வெளியேறும்.

கிருமி யோனி

போகம் மிகுதியினால் பெண்குறியில் இரத்தம் கட்டி கிருமிகள் உருவாகும். பெண்குறியில் நமைச்சல் ஏற்பட்டு போகத்தில் அதிக விரு ப்பம் காணும். நாற்றமுடன் கூடிய உதிரம் வெளியேறும். மூச்சு மிக வேகமாக வெளியேறும். இது கிருமி யோனி நோயின் செய்கை ஆகும்.

மருந்து

லேபனம், வேப்பின்பட்டை, நன்னாரி, பூண்டு, ஓமம், வாய்விளங்கம், ஆடு தீண்டாப்பாளை, கும்மட்டி கனி சம அளவு எடுத்து அரைத்து, அதை பெண் குறிக்கு உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் பூசி குளிக்க கிருமி யோனி நோய் மாறிப் போகும்.

தாமரைக்காய் யோனி

அளவுக்கு அதிகமான போகத்தின் கார ணத்தினால் பெண்குறியின் வாய்ப்பகுதி உலர்ந்து போகும். இரத்தமானது தசை யில் மேவி பெண்குறியின் மேல்பகுதி யில் தாமரைக்காய் போல் சிறு கட்டிகள் காணும். அந்த கட்டிகளில் கிருமியின் தன்மையும் காணும். இது தாமரைக்காய் யோனியின் குறி குணம் ஆகும்.

விபரீத யோனி

மோகம் அதிகமாகி, காம உணர்ச்சிகளை மனதில் கொண்டு, தன் கணவனை எப்போதும் மனதில் எண்ணி தன் பார்வைக்குள் எப்போதும் வைத்திருக்கும் பெ ண்களுக்கு மதனநீர்வெளியேறி தன்னு டைய மதியை மயங்கச்செய்து உடலின் பலத்தை குறைக்கும். இது விபரீத யோனியின் குறி குணம் ஆகும்.

மருந்து

குக்கிலாதி கிறுதம், வேப்பின் பட்டை, சீந்தில், பேய் புடோல், ஆடா தோடை வேர், சுண் டை வேர், வகைக்கு 120 கிராம். 22.5 லிட்டர் தண்ணீர் கசாயம் வை த்து 2.25 லிட்டர் ஆக்கவும்.

விழாலரிசி, பாட த்தாளி கிழங்கு, திப்பி லி, சுக்கு, கொட்டம், சதகுப்பை, சவர்க்காரம், மிளகு, ஓமம், சிற்றர த்தை, கடுகுரோகிணி, வசம்பு, சீரகம், காட்டுத்திப்பிலி வேர், சித்திர மூலம், அதிவிடையம், சிறு காஞ் சொறி, குடகப்பாலரிசி, சிறு புன்ன லரிசி, காட்டு மிளகின் வேர், மஞ்சள், துவர்ச்சிலை காரம், காந்தம், தேவதா ரம் வகைக்கு 2.5 கிராம், சேராங்கொட் டை, குக்கில் வகை க்கு 15கிராம்வீதம் மருந்துகளை கசாயத்தில் அரைத்து கலக்கி ஆவின் நெய் 750 மில்லி சேர்த்து முதிர் மெழுகு பருவத்தில் வடிக்கவும்.

ஒரு வேளை 10 மில்லி வீதம் தினசரி 2 வேளை 12 நாட்கள் கொடுக்க யோனிப்புண், யோனிப்புற்று, மேகம், கிருமி, சூலை, வாதம், லிங்கப்புற்று, சொறி, கரப்பன், மேக வாதம், புண்கள், தழுவணை, தேமல், வங்கு, நீர்க்கட்டு, கை, கால் முடக்கம் மாறும்.