பாலம் இடிந்து வீழ்ந்ததால் பரபரப்பு

ரத்தினப்புரி – எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய திசை நோக்கி செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்த ஓயா பாலம் இடிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

மரகுற்றிகளை ஏற்றிய லொறி ஒன்று இன்று (2024.02.05) அதிகாலை பாலத்தை கடக்கும் போதே பாலம் இவ்வாறு இடிந்து விழுந்ததுள்ளது.

எம்பிலிப்பிட்டியவில் இருந்து மாத்தறை, பெலியவத்த தங்காலை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பாலம் இடிந்து வீழ்ந்ததால் பரபரப்பு-oneindia news பாலம் இடிந்து வீழ்ந்ததால் பரபரப்பு-oneindia news பாலம் இடிந்து வீழ்ந்ததால் பரபரப்பு-oneindia news