கத்தியால் கழுத்தை அறுத்தவர் வைத்தியசாலையில்!

தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவமொன்று குருநாகலில் இடம்பெற்றுள்ளது.

நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனைக்கு (ஐஸ் மற்றும் ஹெரோய்ன்) அடிமையாகி இருந்த நபர் ஒருவர் குருநாகல் பஸ் நிலையத்தில் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இந்த நபர் போதைப்பொருளுக்கு அதிக அடிமையானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.