அழகு கலை நிலையத்தில் கள்ளகாதலனுடன் பெண் செய்த காரியம்..!

மொரகஹஹேன கோனபொல அழகு கலை நிலையம் ஒன்றிற்கு வந்து உரிமையாளரை அச்சுறுத்தி கூரிய ஆயுதத்தால் தாக்கி தங்க நகைகளை கொள்ளையடித்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது கள்ளக்காதலனுடன் அழகு கலை நிலையத்திற்கு  வந்த குறித்த பெண், உரிமையாளரை கூரிய ஆயுதத்தை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

சந்தேகநபர் தங்க ஆபரணங்களுடன் தப்பிச் சென்றதுடன், அன்றைய தினமே பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

பின்னர் தனக்கு உடல் நலக்குறைவு இருப்பதாகக் கூறி பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபரான பெண், வைத்தியசாலையில் இருந்து தப்பி அயல் வீட்டில் இருந்த ஆடைகள் மற்றும் 14,000 ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் ஓடி ஒளிந்திருந்த பெண்ணை மொரொன்துடுவ பிரதேசத்தில் வைத்து 19 நாட்களின் பின்னர் ஹொரணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

39 வயதுடைய சந்தேக நபர் பிலியந்தலை மடபாத பகுதியைச் சேர்ந்தவராவார்.