மகனின் பாதணிக்கு வழங்கப்பட்ட வவுச்சரை விற்று போதையில் நீந்திய தந்தை..!

திஸ்ஸமஹாராம பகுதியில் பாடசாலையில் பாதணிகளுக்காக வழங்கப்பட்ட வவுச்சரை விற்று தந்தை ஒருவர் மதுபானம் அருந்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பாடசாலையில் பாதணிகளுக்கு வவுச்சர் வழங்கப்பட்ட நிலையில், பாதணியின்றி பாடசாலைக்கு வரும் மாணவர்களை அழைத்து ஆசிரியர்கள் நடத்திய விசாரணையின் போது குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

மேலும் பல பெற்றோர்கள் பாதணி வவுச்சரை விற்று உருளைக்கிழங்கு, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை கொள்வனவு செய்துள்ளமையும் இதன்போது தெரியவந்துள்ளது.