மன்/ வட்டக்கண்டல் அ.த.க. பாடசாலையில் தரம் – 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா ..!{படங்கள்}

மடு கல்வி வலயத்தில் உள்ள மன்/ வட்டக்கண்டல் அ.த.க. பாடசாலையில் 2024 தரம் – 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா கல்லூரி அதிபர்..F.X.அன்ரன் சேவியர் தலமையில்  இன்று (22) வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக  மடுக் கல்வி வலய ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர்A.J.பொஸ்கோ அவர்களும் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவன  பணிப்பாளர் தேச கீர்த்தி , தேச அபிமானி S.R. யதீஸ் அவர்களும்  பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

விழாவில் தரம் – 1 மாணவர்கள் தரம் – 2 மாணவர்களால் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

 அத்துடன் மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தால் தரம் 1 மாணவர்களுக்கு அன்பளிப்பும்  GCE O/L 2024  மாணவர்களுக்கு (28 பேர்) கணிதபாட பயிற்சிப் புத்தகமும் வழக்கப்பட்டது.

மேலும் தரம் 1  பொறுப்பாசிரியரும் 2023 இல் தரம் 5 இல் 3  மாணவர்களை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற உழைத்த ஆசிரியருமான திருமதி கலிஸ்ரா அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவம் செய்யப்பட்டார்.

 அத்துடன் அண்மையில் புதிய அதிபராக பணியை தொடங்கிய  F.X. அன்ரன் சேவியர்  அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி  கௌரவம் செய்யப்பட்டார்.

மேலும் 2023 இல் தரம் 5  புலமைப்பரிசில பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற 3மாணவர்களும் பாடசாலையினால் கௌரவம் செய்யப்பட்டனர்.

மன்/ வட்டக்கண்டல் அ.த.க. பாடசாலையில்  தரம் - 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா ..!{படங்கள்}-oneindia news மன்/ வட்டக்கண்டல் அ.த.க. பாடசாலையில்  தரம் - 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா ..!{படங்கள்}-oneindia news மன்/ வட்டக்கண்டல் அ.த.க. பாடசாலையில்  தரம் - 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா ..!{படங்கள்}-oneindia news மன்/ வட்டக்கண்டல் அ.த.க. பாடசாலையில்  தரம் - 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா ..!{படங்கள்}-oneindia news மன்/ வட்டக்கண்டல் அ.த.க. பாடசாலையில்  தரம் - 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா ..!{படங்கள்}-oneindia news