கும்பத்துக்குள் நுழையும் சுக்கிரன்-இந்த 5 ராசிகளுக்கும் இனி வெற்றிகள் மட்டும் தானாம்..!

கும்பம் – கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழ்வதால், இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலை தேடி வரும். உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். திருப்தியான வாழ்க்கையை வாழ்வீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். இக்காலத்தில் நீங்கள் இருவரும் சேர்ந்து முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.

மகரம் – மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் அதிகம் கிடைக்கும். எதிர்பார்த்த வேலை இக்காலத்தில் கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் நிறைய பணத்தை சம்பாதிப்பதோடு, நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும். குடும்பத்தில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சை கேட்பார்கள்.

துலாம் – துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் வேகமாக முன்னேறுவார்கள். செல்வம் பெருகும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் உள்ளன. நிதி நிலை வழக்கத்தை விட வலுவாக இருக்கும். உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் இடையே உள்ள உறவும் நன்றாக இருக்கும்.

ரிஷபம் – ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் பல புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் நிறைய கிடைக்கும். சிலர் நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறலாம். இந்த புதிய வேலையால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு கிடைக்கும்.

கடகம் – கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திப்பார்கள். தொழில் ரீதியாக, பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலர் நல்ல சம்பளத்துடனான நல்ல வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். இக்காலத்தில் வசதியும், ஆடம்பரமும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். மொத்தத்தில் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் வெற்றி கிடைக்கும்.