ரயிலில் உள்ள மின் விசிறிகளை திருட முயன்ற ரயில்வே ஊழியருக்கு நேர்ந்த கதி..!

மாளிகாவத்தை ரயில்வே  தரிப்பு  பகுதியில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகளின் மின்விசிறிகளை திருட முயன்ற ரயில்வே திணைக்கள ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குடாபலுகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே சந்தேக நபர், திருடிய ரயில் பெட்டிகளின் மின் விசிறிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பல காலமாக ரயில் பெட்டிகளின் மின்விசிறிகளை திருடி வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெமட்ட‎கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.