ராவண லங்கா நீயூஸ் இணையதள ஆசிரியர் கைது..!

உரிமம் இன்றி இணையதளம் நடத்தி, இராணுவத் தளபதி மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இணையதள ஆசிரியரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதிமன்றம் புதன்கிழமை (6) உத்தரவிட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கல்கந்தே புரன்வத்தலகே நிஸங்கவே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ராவண லங்கா நியூஸ் என்ற இணையத்தளத்தை நடத்தி வருவதாகவும், அவர் வெளியிட்டுள்ள செய்திகள் தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.