மீன் பிடிக்க சென்ற 5 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம்..!

ஜின் கங்கையில் மீன் பிடிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெலிகட பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் காலி – கினிமெல்லகஹா பிரதேசத்தை சேர்ந்த தோட்ட காவலாளியாக பணிபுரியும் 59 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார்.

இவர் சில நபர்களுடன் இணைந்து வக்வெல்ல பகுதிக்கு அருகில் ஜின் கங்கையில் மீன் பிடிக்க சென்றுள்ள நிலையில் இவருடன் சென்ற அனைவரும் வெவ்வேறு பிரிந்து சென்று மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அனைவரும் தங்களது வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் வீடு திரும்ப ஆயத்தமாகும் போது குறித்த நபர் காணாமல்போயுள்ளதை அவதானித்துள்ளனர்.

குறித்த நபர் நீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகித்த அவர்கள் பிரதேசவாசிகளின் உதவியுடன் தேடுதல் பணியை ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.