A schoolgirl was dragged into the forest and raped: Mysterious individual absconded after robbing the jewels!
It has been reported {that a} pupil who was strolling on the street in Puttalam, Munthal police station was dragged into the forest by a younger man, raped her, robbed her of gold jewellery and fled.
The police mentioned that on the twenty fifth, the coed went to Puttalam metropolis and met a younger man who claimed to be her boyfriend.
Police mentioned that the coed advised her mom about this and the mom and daughter got here to the Munthal police station and lodged a criticism.
The police mentioned that after the coed knowledgeable the police that she was raped, she was taken to the hospital for a medical examination.
The police are conducting preliminary investigations on this regard.
பாடசாலை மாணவியை காட்டுக்குள் இழுத்துச் சென்று வல்லுறவு: நகைகளை கொள்ளையிட்டு மர்ம நபர் தலைமறைவு!
புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவில் வீதியில் சென்று கொண்டிருந்த மாணவியை இளைஞன் ஒருவர் காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கி, தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
கடந்த 25ம் திகதி மாணவி புத்தளம் நகருக்குச் சென்று தனது காதலன் எனக் கூறிக்கொள்ளும் இளைஞனைச் சந்தித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மாணவி வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, ஆட்களற்ற பகுதியில் இனந்தெரியாத இளைஞன் ஒருவன் மாணவியை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, மாணவி அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது
மாணவி இது குறித்து தனது தாயாரிடம் கூறியதாகவும், தாயும் மகளும் முந்தல் பொலிஸ் நிலையம் வந்து முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மாணவி பலாத்காரத்திற்குள்ளானதாக பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.