கூகுள் அளித்த இன்ப அதிர்ச்சி..!
போட்டி நிறுவனத்தில் சேருவதற்காக பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்த ஊழியருக்கு, கூகுள் நிறுவனம் 300 சதவீத சம்பள உயர்வை வழங்கியுள்ளது. தற்போது உலகெங்கிலும் செயற்கை நுண்ணறிவு ஒரு பேசுப்பொருளாக உள்ளதோடு அது தொடர்பான நிறுவனங்களும் அதிகரித்துள்ளன. அதற்கமைய, ‘பெர்ப்லெக்சிடி’ என்ற நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்திய தொழில்நுட்ப கழகத்தின் முன்னாள் மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸால் உருவாக்கப்பட்டிருந்தது. குறித்த செயற்கை நுண்ணறிவு நிறுவனம் 2022ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்த நிலையில், அந்நிறுவனம் கூகுள் நிறுவனத்திற்கு சவாலாக […]
வேகமாய் பரவும் மற்றுமொரு நோய்-அதிர்ச்சி தகவல்..!
கனடாவில் உள்ள விஞ்ஞானிகள் “ஜாம்பி மான் நோய்” என்று அழைக்கப்படும் ஒரு அபாயகரமான தொற்று பரவுவது குறித்து கவலை எழுப்பியுள்ளனர். மேலும், அது விரைவில் மனிதர்களை பாதிக்கக்கூடும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளனர். நாள்பட்ட இளைப்பை நோயான இது பெரும்பாலும் “ஜாம்பி மான் நோய்” என்று அழைக்கப்படுகிறது. தி கார்டியன் செய்திச் சேவையின் தகவலின்படி, கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியா தற்சமயம் நோயின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு உத்தியை வெளியிட்டுள்ளது. நோய் அறிகுறி நாள்பட்ட இளைப்பை நோய் […]
தந்தையின் உயிர் அணுக்களில் குழந்தை பெற்ற மகன்-நடந்தது என்ன..?
இங்கிலாந்தில் இளைஞர் ஒருவர் , தமது தந்தையின் விந்தணுவைப் பயன்படுத்தி தன் மனைவிமூலம் குழந்தை பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் குழந்தையின் உண்மையான தந்தையை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும்’ என்று வழக்கு தொடுத்து நிலையில் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. தற்போதைய இளம் தலைமுறையினரிடையே குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. மாறிவரும் வாழ்வியல் சூழல்கள், உணவு முறைகள், பரவும் நோய்கள், சத்துக்குறைபாடு, உடல்பருமன், சுற்றுச்சூழல், பணி அமைவிடம், மனஅழுத்தம் எனப் பல காரணங்கள் […]
பணத்திற்கு ஆசைப்பட்டு உயிர் தோழியை கொன்ற பெண்ணுக்கு இத்தனை ஆண்டு சிறையா-நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!
ஒன்பது மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஆசைப்பட்டு தமது உயிர்த் தோழியைக் கொலை செய்ய சதி செய்த பெண்ணுக்கு 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் கொலை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நிகழ்ந்தது. தம்மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டை 23 வயது டெனலி பிரேமர் ஒப்புக்கொண்டுள்ளார். இக்கொலை, ஜூன் 2, 2019இல் தண்டர்பர்ட் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள எக்லுட்னா ஆற்றின் கரையில் நடந்தது. அங்கு, 19 வயதான சிந்தியா ஹோஃப்மன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் ஆற்றில் வீசப்பட்டதாகவும் […]
700 ஆண்டுகள் பழமையான முட்டையில் மஞ்சள் கரு-வியப்பில் மூழ்கிய ஆய்வாளர்கள்..!
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட கருவிகள், அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் போன்றவற்றைக் கண்டறிய அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் பழங்காலத்தின் பெருமையை கண்முன் கொண்டு வருவது மட்டுமின்றி பல அறியப்படாத அற்புதங்களையும் கண்டு பிடிக்கின்றனர். அப்படி அற்புதமான ஒன்றை கண்டுபிடித்துள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். பொதுவாக எந்த முட்டையையும் சில நாட்கள் மட்டுமே பழுதடையாமல் சேமிக்க முடியும். பின்னர் சிதைந்து போகும் அல்லது கெட்டுப்போய்விடும். […]
ருவாண்டாவில் புலம்பெயர் தமிழ் அகதிகளுக்கு பாலியல் தொல்லை-நரக வேதனை அனுபவிக்கும் தமிழ் பெண்கள்..!
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டியாகோ கார்சிதீவு அகதிகளை நீண்ட காலம் தடுத்து வைப்பதற்கு ஏற்ற இடம் அல்ல என ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறிய பின்னரும் அதே நிலை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட பின்னர், அகதிகள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமை பற்றிய அறிக்கைகள் வெளிவந்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. டியாகோ கார்சியாவிலிருந்து ருவாண்டாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு […]
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு..!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் கலிபோர்னியாவின் சான் மேடியோவில் செவ்வாய்க்கிழமை (13) அவர்களது வீட்டிற்குள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனந்த் சுஜித் ஹென்றி (42), அவரது மனைவி அலைஸ் பிரியங்கா (40) மற்றும் அவர்களது இரட்டைக் குழந்தைகளான நோவா மற்றும் நெய்தன் (4) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளவர்கள் ஆவர். துப்பாக்கிச் சூட்டு காயம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் […]
உலகம் முழுவதும் செயலிழந்த பேஸ்புக்..!
உலகம் முழுவதும் பேஸ்புக் நிறுவனம் பெரிய செயலிழப்பைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேஸ்புக் பயனர்கள் X தளத்தில் எழுதியுள்ளனர். செயலிழப்பு குறித்து டவுன் டிடெக்டரில் 2,000க்கும் மேற்பட்ட அறிக்கைகள் காணப்பட்டதுடன், சுமார் ஒரு மணி நேரத்திற்குள், இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து கிட்டத்தட்ட 5,000 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பெரும்பாலான அறிக்கைகள் லண்டன், மான்செஸ்டர் மற்றும் லிவர்பூலில் இருந்து பதிவாகியுள்ளதுடன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் தாய்லாந்திலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து […]
லண்டன் சாலைகளில் திருமண உடையில் உலவும் பெண்..!
டிஜிட்டல் மார்கெட் துறையில் பணியாற்றும் ஸ்பானிஷ் இந்திய மொடலான ஷாரதா என்னும் பெண், திருமணப் பெண்போல் லெஹங்கா உடை அணிந்து லண்டன் மெட்ரோவில் நடந்து திரிகிறார். சாலையில் நடந்து செல்லும் அவரை அங்குள்ளவர்கள் பார்த்து திகைக்கின்றனர். ஒரு சிலர் அவரை புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர்.
அவுஸ்ரேலியாவில் உயிரிழந்த கணவர்-சாட்சியங்களை சமர்ப்பித்த மனைவி..!
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்து நாட்களுக்குள் மூன்று தடவை ரோயல் அடிலெய்ட் வைத்தியசாலையின் (RAH) உதவியை நாடிய இலங்கையர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொவிட் தோற்று பரவலின் போது ரோயல் அடிலெய்ட் வைத்தியசாலையின் உதவியை 23 வயதுடைய இலங்கை பிரஜையான சசிந்தா பட்டகொடகே எனும் இளைஞர் கோரியுள்ளார். குறித்த இளைஞர் இறப்பதற்கு முன்னதாக இருமல் மற்றும் இரத்த வாந்தி எடுத்துள்ளதாக வைத்தியர்களிடம் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. 2020 ஆம் ஆண்டி இந்த […]