Home இந்தியா Chennai Rains Today சென்னையில் சட்டென மாறிய வானிலை

Chennai Rains Today சென்னையில் சட்டென மாறிய வானிலை

சென்னையில் மாலை முதல் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அடுத்த மூன்று மணி நேரம் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மாலை முதல் சென்னையில், கிண்டி, அடையாறு, சேப்பாக்கம், திருவல்லிக்கேனி, மயிலாப்பூர், திருவான்மியூர், தரமணி, பட்டினப்பாக்கம், தி.நகர், வட பழனி, கே.கே.நகர், ஈக்காட்டு தாங்கல், அசோக் நகர், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், முடிச்சூர், வண்டலூர், பூவிருந்தவல்லி, போரூர், மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக மழை தொடர்ந்து பெய்யும் இடங்களையும் சென்னை வானிலை ஆய்வு மையம் பட்டியலிட்டுள்ளது.

அந்த வகையில், ஆலந்தூர், கிண்டி, வேளச்சேரி, மதுரவாயல், மாம்பலம், பூவிருந்தவல்லி அயனாவரம், மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, மாதவரம், அமைந்தக்கரை, எழும்பூர், மாம்பலம், ஊத்துக்கோட்டை, அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

தாம்பரம், வண்டலூர், பல்லாவரம், செங்கல்பட்டு, செய்யூர், திருத்தணி, அரக்கோணம், காஞ்சிபுரம், குன்றத்தூர், வாலாஜாபாத், நெமிலி, சோளிங்கர், ஸ்ரீபெரும்புதூர், திருப்போரூர், வாலாஜாபேட்டை பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version