INDvsBAN : 2-வது டெஸ்ட் போட்டியில் மழைக்கு வாய்ப்பா? வானிலை அறிக்கை கூறுவது என்ன?

Kanpur Test , INDvsBAN

கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அந்த டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியானது வரும் செப்-27ம் தேதி கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டிக்கு இரு அணிகளின் ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் நிலையில், இந்த போட்டியில் மழை பெய்வதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது 92% சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறிவருகின்றனர்.

செப்-27ம் தேதி தொடங்கவுள்ள இந்த டெஸ்ட் தொடரின் முதல் நாள் 92% சதவீத மழையும், 2-ஆம் நாள் 49% சதவீத மழையும், மூன்று மற்றும் நான்காம் நாளில் 65% சதவீத மழையும், 5-ஆம் நாள் சிறுதளவு மழை பொழிவு இருக்கும் என தெரிவித்துள்ளனர். அதன்படி, பார்க்கையில் இந்த போட்டி நடத்தாமல் கைவிட படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஒருவேளை இந்த அட்டெஸ்ட் போட்டி நடைபெறாமல் கைவிடப்பட்டால், இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றுவார்கள். ஆனால், அதனை இந்தியா அணி விரும்பாது அதற்கு காரணம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச டெஸ்ட் உலகக்கோப்பை இறுதி போட்டி தான்.

அந்த இறுதி போட்டியில் இந்திய அணி விளையாடவேண்டுமென்றால் அதற்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி கட்டாயமாக 5 போட்டிகளை வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்திய அணி இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றதால் இன்னும் 4 போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முனைப்புடன் விளையாடுவார்கள்.

அடுத்ததாக நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியுடன் தொடர்ந்து 8 டெஸ்ட் போட்டிகளில் இந்திய விளையாட இருக்கிறது. இதனால், வங்கதேசம் போன்ற எளிய அணியுடன் இது போல மழையால் கைவிடப்பட்டால் அது இந்திய அணிக்கு வருத்தமாகவே அமையும்.

இதனால், நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டி மழையால் நடைபெறாமல் இருக்கிறதா? அல்லது நடைபெற்று முடிவு இந்திய அணிக்கு சதாகமாக இருக்கிறதா என்பதை பொறுத்து இருந்து பாப்போம்.