Tag: ஏனையவை

HomeTagsஏனையவை

இறங்குதுறைப் பிரச்சினைக்குத் தீர்வுகோரி மீனவர்கள் போராட்டம்.!

தாம் எதிர்கொள்ளும் இறங்குதுறைப் பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம் – சாவல்கட்டு மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 8:30 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலத்திற்கு முன்பாக ஆரம்பமான மீனவர்களின் போராட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்தது. மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபரை சந்தித்த சாவல்கட்டு மீனவர்கள் தமது பிரச்சினைகளை தெரியப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து ஆளுநர் செயலக நுழைவாயிலை மறித்து நுழைவாயில் முன்பாக அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். தாங்கள் ஆளுநரை சந்தித்த பின்னரே போராட்டத்தை […]

உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டுவிழா.!

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் கல்லூரி மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் கலந்து கொண்டார். இதன்போது இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டதுடன், இரண்டு இலட்சிணைகள், பாடல் என்பனவும் வெளியிடப்பட்டது.கல்லூரி மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது. தென்னிந்திய திருச்சபை பேராயர் கலாநிதி […]

கெருடாவில் மைக்கல் நேசக்கரம் ஊடாக இரு குடும்பங்களுக்கு உதவி.!

வடமராட்சி கெருடாவில் பகுதியில் கணவர் இன்றி ஒரு மகனுடன் வாழ்ந்து வரும் பெண் ஒருவருக்கு  குழாய்க்கிணறும்   நீர்த் தொட்டியும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது கனடாவில் வாழ்ந்து வரும் நாகலிங்கம் நாகபாஸ்கரன் என்பவரது நிதிப்பங்களிப்புடன் இந்த நீர்த்தொட்டி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது . கெருடாவில் பகுதியைச் சேர்ந்த பொருண்மியம் நலிவுற்ற மற்றுமோர் குடும்பத்திற்கு டென்மார்க் அன்பர் முன்வந்து வழங்கிய நிதியில் கடந்த ஞாயிறு அன்று (4)நீர்த்தொட்டி அமைத்துக் கையளிக்கப்பட்டது. புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில்  மைக்கல் நேசச்கர அமைப்பினர் இந்த உதவிகளை வழங்கிவைத்தனர்.

சாந்தனின் இலங்கை வருகை – ஜனாதிபதி இணக்கம்.!

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார்...

போலித்தாலி கொடுத்து 21 பவுண் மோசடி செய்த யுவதி கைது!

வாய் பேச முடியாத பெண்னொருவரிடமிருந்து 21 பவுண் தாலிக்கொடியை வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்...

பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்வது சமூகப் பொறுப்பாகும் – யாழ்.அரச அதிபர்..!

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மனிதர்களின் அன்றாட வீண் விரைய செலவினங்களை தவிர்க்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தினை முன்னிட்டு...

தாய்நிலம் விடிவுறும் நாளே, தமிழரின் சுதந்திர நாள்! – பல்கலை மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு. !

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறிலங்காவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும், மக்கள் சமூக அமைப்புக்களும்,...

கிளிநொச்சி போராட்டம் – கைதானோர் விடுதலை.!

சுதந்திர தினத்தை கரிநாளாக சித்த்திரித்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தின் போது, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் ஐவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கைதான மாணவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி,...

பொலிசாரின் தடைகளை மீறி மட்டக்களப்பில் போராட்டம்.!

சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் எனும் தொனிப் பொருளில்  பொலிசாரின் பல தடைகளைத் தாண்டியும் நீதிமன்ற தடை உத்தரவை மீறியும், பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04)...

சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் – யாழிலும் முன்னெடுப்பு.!!

இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களின் கரிநாள் என குறிப்பிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று, யாழ்ப்பாபத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான போராட்டம், பதாகைகளைத் தாங்கிய ஊர்வலமாக யாழ்ப்பாண...

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு 23 இந்திய மீனவர்கள், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன....

கட்டைக்காட்டில் சுதந்திர தின நிகழ்வு.!

இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினம் கட்டைக்காடு முள்ளியான் கிராம அலுவலர் காரியாலயத்தில் இன்று கொண்டாடப்பட்டது. முள்ளியான் கிராம அலுவலர் கி.சுபகுமார் தலைமையில் காலை 08.30 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் முள்ளியான்...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...