Tag: அட்டகாசம்

HomeTagsஅட்டகாசம்

வெற்றிலைக்கேணியில் இந்திய இழுவைமடி படகுகள் அட்டகாசம் – 30இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை கொண்டு சென்றனர்..!{படங்கள்}

வெற்றிலைக்கேணியில் இந்திய இழுவைமடி படகுகள் அட்டகாசம் – 30இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை கொண்டு சென்றனர் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இன்று 22.02.2024 பத்திற்கும் மேற்பட்ட இந்திய இழுவைமடி படகுகள் 4மீனவர்களுக்கு சொந்தமான 30 இலட்சம் பெறுமதியான வலைகளை அறுத்து இழுத்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வெற்றிலைக்கேணியில் இருந்து நேற்று (22)மீன்பிடிக்க சென்ற நான்கு  படகுகள் தங்களது மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போது கரைக்கு அண்மையாக வந்த இந்தியன் இழுவைமடி படகுகள் அவர்களுடைய […]

வெடுக்குநாரி மலையில் பிக்கு குழு சப்பாத்துக்காலுடன் அட்டகாசம்

வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் பிக்குககளும், தொல்பொருள் திணைக்களமும், இராணுவமும் மீண்டும் வந்துள்ளனர். சிவலிங்கத்தின் பக்கத்தில் சப்பாத்துகளுடன் நின்று மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். இராணுவ பாதுகாப்புடன் வருகைதந்த பிக்கு குழு ஆலய வளாகத்தை பற்றி கலந்துரையாடியததோடு இந்து கோயிலின் சின்னங்களை அவமதிக்கும் வகையில் மிகவும் கீழ்த்தரமாக சப்பாத்துக்காலுடன் நடந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.

கடமை நேரத்தில் தூங்கியவர் அட்டகாசம்! மின் விளக்கை ஒளிரவிட்டதால் 3 பேர் மீது தாக்குதல்

கண்டி தேசிய வைத்தியசாலையில் மின்விளக்கை ஏற்றியதால் தூக்கம் கலைத்ததாக குறிப்பிட்டு, மூன்று சிற்றூழியர்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிற்றூழியர் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். கண்டி தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவின் அறையொன்றில் கடமை நேரத்தின் போது உறங்கிக் கொண்டிருந்த இந்த சிற்றூழியர், மின்விளக்கு ஒளிரவிடப்பட்டதால் தூக்கம் கலைந்ததாக குறிப்பிட்ட மூன்று சிற்றூழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவின் பிரகாரம், அவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவரது தாக்குதலால் காயமடைந்த மூன்று சிற்றூழியர்கள் 17ஆம் இலக்க விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சிற்றூழியரை வைத்தியசாலை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று முன்தினம் (01) காலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் ரௌடிகள் அட்டகாசம்: வெளிநாட்டிலிருந்து வந்தவரின் வீட்டை சுற்றிவளைத்து தாக்குதல்!

வெளிநாட்டு பிரஜையின் குடியிருப்புக்குள் குழுவொன்று புகுந்து சரமாரி தாக்குதல் நடத்தியதில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி திருவையாறு பகுதியில் வீதியால்...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...