வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்வஞ்சல் பாண்டே (Dr.Satvanjal Pandey) உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல், காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி மின்னுற்பத்தியை மேற்கொள்ளுதல் மற்றும் வடக்கில் முன்னெடுக்கக்கூடிய ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது.
சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்பகட்ட கள ஆய்வில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை நேற்று (11.03.2024) மாலை சந்தித்து கலந்துரையாடினர். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் பொருளாதார துறையின் முதலாம் நிலை செயலாளரின் தலைமையில் குறித்த நிபுணர்கள் குழாம் கௌரவ ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண மக்களின் தற்போதைய வாழ்வியல் செயற்பாடுகள், பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுலாத்துறை, உட்கட்டமைப்பு வசதிகள், சமுத்திர பாதுகாப்பு, கடற்றொழில் செயற்பாடுகள், கண்ணிவெடி அகற்றுதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம், கௌரவ ஆளுநரிடம் கேட்டறிந்துக்கொண்டனர்.
யாழ்ப்பாண பாதுகாப்புப்படைத் தலைமையக கட்டளைத்தளபதி வடக்குமாகாண கெளரவ ஆளுநருடன் கலந்துரையாடல் வடக்குமாகாண கெளரவ ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களுக்கும் யாழ் பிராந்திய பாதுகாப்புப்படைத் தலைமையகக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று(19/02/2024) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பிராந்தியத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உரிய வகையில் முன்னெடுத்து செல்லல், பொது மக்களின் நாளாந்த வாழ்வியல் செயற்பாடுகளின் போது தேவையான பாதுகாப்பை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...