முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கான இயந்திரம் மூலம் நெல் நாற்று நடுகை தொடர்பான கருத்தரங்கு நேற்று (06) ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது லைக்கா ஞானம் பவுண்டேஷன் நிறுவனத்தின் நிதி அனுசரணையோடு முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி யாமினி சசீலன் அவர்களது ஒழுங்குபடுத்தலில் குறித்த இயந்திரம் மூலம் நெல் நாற்று நடுகை தொடர்பான கருத்தரங்கு ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது . மாவட்ட விவசாய பயிற்சி நிலைய […]
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில்22.02.2024 வியாழக்கிழமை கரையொதுங்கிய இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரத்தை JCB,உழவு இயந்திரம் கொண்டு கடற்படையினர் அகற்றினர். மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற போது இதனை அவதானித்த கட்டைக்காடு மீனவர்கள் தங்களது முயற்சியால் கரைக்கு கொண்டுவந்தனர். கரையில் இருந்து குறித்த கூடாரத்தை அப்புறப்படுத்தும் மீனவர்களின் முயற்சி தோல்வியுற்றதால் JCB,உழவு இயந்திரம் கொண்டு வெற்றிலைக்கேணி கடற்படையினர் அதனை இன்று23.02.2024 வெள்ளிக்கிழமை அகற்றியுள்ளனர். கடற்படையுடன் இணைந்து கட்டைக்காடு மீனவர்களும் கூடாரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...