சட்டவிரோதத் தொழிலான ஒளி பாய்ச்சி கடலில் தொழில் செய்து கொண்டிருந்த மீனவர் ஒருவர் நேற்றுப் பிற்பகல் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலில் சுற்றுக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வெற்றிலைக்கேணி கடற்படையினர் கட்டைக்காட்டு கடற்பரப்பில் ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த அதே பகுதியை சேர்ந்த 23வயதுடைய நபர் ஒருவரே உடமைகளுடன் கைது செய்யப்பட்டார். ‘ கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...