வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் வெல்லவாய குமாரதாச சந்தியில் சற்று முன்னர் தனியார் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பஸ் சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற 7 வீதி விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் அனைத்தும் நேற்று (04) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். களவாஞ்சிகுடி – குருமன்வெளி வீதியில் எருவில் காயல் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை, எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாலியால […]
ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் பெண்களை பணத்துக்காக விற்பனை செய்யும் இரண்டு ஸ்பா நிலையங்களை சுற்றிவளைத்து இரண்டு முகாமையாளர்களுடன் 8 பெண்களையும் கைது செய்ததாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை, இங்கிரிய, இரத்தினபுரி, தமன, நிவித்திகல மற்றும் நாவலப்பிட்டிய பிரதேசங்களில் வசிக்கும் 25 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட எட்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் மஹரகம வட்டேகெதர மற்றும் பன்னிபிட்டிய தெபானம […]
ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் பெண்களை பணத்துக்காக விற்பனை செய்யும் இரண்டு ஸ்பா நிலையங்களை சுற்றிவளைத்து இரண்டு முகாமையாளர்களுடன் 8 பெண்களையும் கைது செய்ததாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை, இங்கிரிய, இரத்தினபுரி,...
இரண்டு பெண் குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தச் மோதல் சம்பவம் பதுளை, மீகஹகிவுல தல்தென பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது குறித்த மோதலில் காயமடைந்த 06 வயது சிறுமியும் இரண்டு பெண்களும் மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆபத்தான நிலையில் இருந்த பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு நீண்டதன் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இரண்டு பெண் குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்தச் மோதல் சம்பவம் பதுளை, மீகஹகிவுல தல்தென பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது
குறித்த மோதலில் காயமடைந்த 06 வயது சிறுமியும் இரண்டு பெண்களும் மீகஹகிவுல மாவட்ட...
வீட்டுத் தொகுதிக்குள் புகுந்த காட்டுப்பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகி வீதியில் நடந்து சென்ற பெண் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீரிகம விஜய ரஜதஹனவில் இடம்பெற்றுள்ளது. காட்டுப்பன்றியின் தாக்குதலால் கார் ஒன்றொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், காயமடைந்த ஒருவர் மீரிகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு ஏனைய இருவரும் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வீட்டுத் தொகுதிக்குள் புகுந்த காட்டு பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகி வீதியில் நடந்து சென்ற பெண் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மீரிகம விஜய ரஜதஹனவில் இடம்பெற்றுள்ளது.
காட்டுப்பன்றியின் தாக்குதலால் கார் ஒன்றொன்றும்...
கற்பிட்டி – நுரைச்சோலை, ஆலங்குடா பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து போதைப் பொருளுடன் இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஏழு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் இளம் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். ஆலங்குடா பகுதியில் உள்ள கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் வீடொன்றில் இளைஞர்கள் குழுவொன்று போதைப் பொருள் பாவிப்பதாக நுரைச்சோலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலின் அடிப்படையில் அந்த வீட்டை சுற்றிவளைத்த […]
கடலூர் மாவட்டம் மேல் புவனகிரியை சேர்ந்த பஞ்சநாதன் என்பவர், 2014-ல் தனது மகள் சீதாவை (28) காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில், சீதாவுக்கும், சிதம்பரம் விகேபி தெருவை சேர்ந்த சரவணன் (36) என்பவருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது தெரியவந்தது. இந்நிலையில், அதே ஆண்டு சரவணன் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். சரவணனின் அக்காள் சகுந்தலாவின் கணவர் வெங்கடேசன், மேல்புவனகிரி விஏஓ முன்னிலையில் ஆஜராகி, சீதா கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்தார். சீதா தலித் பெண் […]
மட்டு வாழைச்சேனையில் 5அரை கிராம் ஜஸ் போதை பொருளுடன் பிரபல வியாபாரி உட்பட 3 பேர் கைது மோட்டர்சைக்கிள் மீட்பு மட்டக்களப்பு வாழைச்சேனையில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல போதை வியாபாரி ஒருவர் உட்பட 3 பேரை இன்று புதன்;கிழமை (21) அதிகாலை வாழைச்சேனனை பிரதான வீதியில் வைத்து 5 அரை கிராம் 200 மில்லிகிராம் ஜஸ் போதை பொருளுடன் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்ததுடன் மோட்டர்சைக்கிள் ஒன்றை மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை […]
தகாத உறவு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் ஏற்பட்ட தகராற்றில் மூன்று பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (19) இரவு இராமநாதபுரம், கல்மடு நகரில் பதிவாகியுள்ளது. படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 28 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களும், 28, 30 மற்றும் 50 வயதுடைய மூன்று பெண்களுமே இவ்வாறு காயமடைந்துள்ள நிலையில், இவர்கள் பளை மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். தகாத […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...