யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டு சரிந்து விழுந்தன. குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து சில மணிநேரம் முற்றாக பாதிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட இ.போ.ச. பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட எரிபொருள் தாங்கி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி எரிபொருள் வீதியில் கொட்டியது. சாதுரியமாக செயற்பட்ட இ.போ.ச. சாரதி பேருந்தை ஒரமாக நிறுத்திவிட்டார். இதன்போது வீதியில் வந்த டிப்பர் வாகனம் கொட்டியிருந்த […]
கிளிநொச்சியில் பூட்டிய அரச அலுவலகத்தில் யுவதியுடன் இருந்த அரச உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்து விசாரணையின் பின் விடுவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் யுவதியொருவரும் அரச உத்தியோகத்தர் ஒருவரும் கிளிநொச்சியிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்துக்குள் சென்றுள்ளனர். இதன்பின் அதை பார்த்த சிலர் இருவரும் அலுவலகத்துக்குள் சென்று நீண்ட நேரம் ஆகியும் வெளிவராததை தொடர்ந்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். இதனைடுத்து அங்கு வந்த பொலிஸார் வெளியில் வருமாறு கூறியுள்ளனர். நபர் மட்டும் வெளியில் வந்து தன்னை ஒரு அரச உத்தியோகத்தர் என அடையாளப்படுத்திக்கொண்டார். மேலும் வேறு யாரேனும் உள்ளார்களா என கேட்டபோது தனது தோழி உள்ளார் எனவும் இந்த அலுவலகம் அவரது அலுவலகம் எனவும் மாலை நேரங்களில் அதில் அவல் ஓய்வு எடுக்க வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அத்தோழி மலசலக்கூடத்தை பயன்படுத்த வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரையும் விசாரணைசெய்ததைத்தொடர்ந்து அப்பெண் 20 வயது மாணவி என தெரியவந்துள்ளது. […]
கனடாவின் ஒடாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 06 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த இளைஞன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அங்கு, சந்தேக நபர் மிகக் குறைவாகவே பேசியுள்ளதாகவும், நீதிமன்றத்தில் மீண்டும் அமர்வதற்கு முன்பு தனது பெயரையும் பிறந்த இடத்தையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எதிர்வரும் 14ம் திகதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சந்தேகநபர் மீது கொலை மற்றும் […]
கனடாவின் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் வைத்து இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வௌியாகியுள்ளன. சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நான்கு குழந்தைகளும் ஏழு வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். […]
காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரே சந்தேகத்தின் பேரில் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் […]
காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின்...
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் கே.எல்.எம்.சாஜீத் இன்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டார். தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை […]
தனது மனைவியை பலமாக தாக்கி காயப்படுத்தி , விபத்தில் காயமடைந்ததாக கூறி வைத்தியசாலையில் அனுமதித்ததாக கூறப்படும் கணவர் களுத்துறை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பதுரலிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவராவார். 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான தனது மனைவி முச்சக்கரவண்டியில் இருந்து வீழ்ந்து காயமடைந்துள்ளதாக கூறி இவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதுரலிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட […]
மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞன் மற்றும் அவரது சிறிய தாயார் உட்பட இருவரை நேற்று (24) இரவு வாகரையில் வைத்து கைது செய்துள்ளதுடன், சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர். குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள சிறுமி கடந்த 7ம் திகதி பாடாலைக்கு சென்ற நிலையில் அவர் வீடு திரும்பாததையடுத்து அவரது உறவினர்கள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தனர். இந்த நிலையில் பொலிஸ் நிலைய […]
மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞன் மற்றும் அவரது சிறிய தாயார் உட்பட இருவரை நேற்று (24) இரவு வாகரையில் வைத்து...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் இந்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அமைச்சுக்களின் செயலாளர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினைத் தொடர்ந்து இரு மாவட்டங்களிலும் உள்ள காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் நடமாடும் சேவையொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் கைதான பெண்ணுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் 1500 மில்லி லீட்டர் கசிப்புடன் பெண்ணொருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். கைதான பெண் விசாரணைகளுக்குப் பின்னர், நேற்றைய தினம் புதன்கிழமை (21) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, அந்தப் பெண் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, கடுமையாக எச்சரித்த நீதவான், அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்தார்.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...