Tag: எம்.எஸ்

HomeTagsஎம்.எஸ்

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை கல்விசார் ஊழியர்களின் கீழ் நியமிக்கவேண்டும். – எம்.எஸ் தௌபீக் எம்.பி கோரிக்கை..!

2019 ம் ஆண்டு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு கடமையில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தற்போது பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் என்றும் அவர்கள் மாணவர்களது தொடர்புபட்டு செயற்படுவதால் அவர்களை கல்விசார் ஊழியர்களின் கீழ் கொண்டுவரவேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார். புதன்கிழமை (7) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தர். மேலும் அவர் உரையாற்றுகையில், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை கல்விசார் ஊழியர்களாக நியமிக்கப்பட்டு கஷ்ட, அதிகஷ்ட கொடுப்பனவுகளை வழங்கநடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் அதிபர், ஆசிரியர் போன்று […]

கிண்ணியா மத்திய கல்லூரிக்கு எம்.எஸ் தௌபீக் எம்.பி விஜயம் ..!{படங்கள்}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்  (28) கிண்ணியா மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்தார். இதன்போது, தௌபீக் எம்.பியின் கோரிக்கைக்கமைவாக அவசர திருத்தவேலைக்காக கல்வி அமைச்சினால் ஓதுக்கிடு செய்யப்பட்ட மூன்று மில்லியன் ரூபாய்க்கான திருத்தப்பணிகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், பாடசாலையின் தேவைகளை பாரளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்ததுடன் விரைவில் தீர்வை பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்ததார் இக்கலந்துரையாடலில், அதிபர் நஜாத், பிரதி அதிபர் கியாஸ், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஹம்சாத் மற்றும் அசிரியர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

குவைத் தூதுவருடன் எம்.எஸ். தௌபீக் சந்திப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபீக் மற்றும் குவைத் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாஃப் எம்.எம். பூ தாஹீர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (22) இடம்பெற்றது. குவைத்திற்கும் இலங்கைக்குமான நீண்டகால உறவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் இச்சந்திப்பின் போது நினைவுபடுத்தியதுடன் கடந்த காலங்களில் எமது நாட்டு மக்களுக்கு உதவியதற்காக தனது நன்றிகளையும் தெரிவித்தார். மேலும், திருகோணமலை மாவட்ட மக்களின் வாழ்வாதார நிலைப்பாடு, கல்வித் தேவைகள் மற்றும் மீனவர்கள், விவசாயிகள் […]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவைத்தார் எம்.எஸ் தௌபீக்..!{படங்கள்}

குறிஞ்சாக்கேணி மாகாத் நகர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்யின் கோரிக்கைக்கமைவாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானுடைய பரித்துரையின்கீழ் LIOC நிறுனத்தின் அனுசரனையில் நிவாரண உதவிகள் தௌபீக் எம்.பி யினால் சனிக்கிழமை (17) வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் LIOC நினுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், முன்னாள் கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர்களான ஜவாதுல்லா, சனூஸ் மற்றும் LIOC நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...