யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன. விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் கசிந்து காணப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (4) முதல் பெற்றோல் ஒக்டேன் 95 லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 447 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 458 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 257 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெற்றோல் Octane 92 மற்றும் ஓட்டோ டீசல் விலையில் மாற்றமில்லை.
யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை திருடிய சந்தேக நபரை நேற்று நெல்லியடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சிசிடிவி கமராக்களை பரிசோதித்தால், அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பது தெரியவரும் என்பதால், கமராக்கள் மூடப்பட்டதாக, இரண்டு ஊழியர்களும் காவல்துறையிடம் வாக்குமூலம் அறித்துள்ளனர். இதன்போது, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைந்த சந்தேக நபர் […]
நாடு முழுவதும் பல பகுதிகளில் நாளாந்த எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர். காலை 10 மணி வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் செலுத்தும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எரிபொருள் விற்பனை பாரியளவில் குறைந்துள்ளதால் காலை பத்து மணிக்குள் பணத்தை டெபாசிட் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் காசோலை வசதியை கழகத்திடம் கேட்டும் இதுவரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பு, போக்குவரத்து கட்டண அதிகரிப்பு சாத்தியம், பாடசாலை போக்குவரத்து கட்டண உயர்வு, ரயில் பொதிகள் சேவை கட்டணம் அதிகரிப்பு போன்ற பல காரணிகள் மாதத்தின் முதல் நாளான இன்று இலங்கையர்களுக்கு...
இன்று (ஜனவரி 01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...