ஒருவர் தனிப்பட்ட முறையில் வீட்டிலே 3 கஞ்சா செடி வரை வளர்க்கலாம் மற்றும் தினமும் 25 கிராம் வரை உபயோகிக்கலாம் என ஜெர்மனி நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ளது.
ஜெர்மனியில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய நாடாளுமன்றம்...
தென்னங் கோம்பைகளை ஏற்றி வந்த “பட்டா வாகனம்” ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலை உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் A9 வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளார். சாவகச்சேரியிலிருந்து தென்னங்கோம்பைகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பட்டா வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி கல்பிட்டி, பத்தலங்குண்டுவ கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் சுமார் 1471 கிலோகிராம் (ஈரமான எடை) எடையுள்ள பீடி இலைகளை டிங்கி படகு மூலம் கடத்த முற்பட்ட 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் 24 மணி நேரமும் விழிப்புடன் இருந்து சட்டவிரோதமான பொருட்கள் வருவதைத் தடுப்பதற்காக வழக்கமான தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்கின்றனர். இந்த முயற்சிகளின் நீட்சியாக, வடமேற்கு […]
இன்று (20) அதிகாலை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்குருகடே சந்தியில் உள்ள கால்வாய்க்கு அருகில் இளைஞன் ஒருவன் கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ருவன் குமார என்ற 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையாகி பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்க ஆபரண புதையல் தொடர்பில் இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாரால் கடந்த 16ம் திகதியன்று குறித்த அகழ்வு பணிக்கான அனுமதி நீதிமன்றில் கோரப்பட்ட நிலையில், மன்றின் அனுமதியுடன் இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட விசுவமடு – குமாரசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றிலேயே விடுதலைப்புலிகள் அமைப்பினால் யுத்த காலப்பகுதியில் தங்க ஆபரணங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்த நிலையில் இன்று பகல் 2.30 மணியளவில் அகழ்வு நடவடிக்கை […]
2024 ஆம் ஆண்டு தொடங்கி இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட முழுமையாக முடியாத நிலையில், ஏற்கனவே சில விஷயங்கள் உண்மையாக நடக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் எங்கு அவர் கூறிய மற்ற விஷயங்களும் உண்மையாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 1) ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் கேன்சர் காரணமாக உயிரிழந்து வருகின்றனர். சில குறிப்பிட்ட வகை கேன்சருக்கு சிகிச்சை இருந்தாலும் பல கொடிய வகை கேன்சர் பாதிப்புகளுக்குச் சிகிச்சையோ அல்லது வேக்சினோ இல்லாமலேயே இருந்தது. இதற்கிடையே கேன்சருக்கான […]
ஒரு நாள் எனது அண்ணா நன்றாக இறைச்சி கொத்து சாப்பிட்டுவிட்டு, இரவு 11.30 போல் வீட்டுக்கு வந்திருந்தார். வழக்கம்போல் உடைகளை மாற்றிக்கொண்டு வீட்டின் முன் அறையில் படுக்கச் சென்றார். படுத்து சிறிது நேரத்தின் பின் படுக்கையறையில் படுத்திருந்த அம்மாவால் உறங்கவே முடியவில்லை. ஏதோ ஒன்று அவரை பிடித்து அமுக்குவதைப் போலவும் எரிந்த முகத்துடன் ஒரு பெண்மணி அவர் அருகில் படுத்திருப்பதைப் போலவும் அவருக்கு உணர்வு ஏற்பட்டது. வாயால் ஏதோதோ சொல்லி உளறிக்கொண்டிருந்தார் அம்மா… அவரது சத்தம் கேட்டு […]
திருகோணமலை மாவட்ட ‘Trincomalee Super 40’ கிரிக்கெட் கழத்தின் ஏற்பாட்டில் ‘Battle of East – 2024’ ற்கான இரண்டாவது மென்பந்து சுற்றுப் போட்டியை கடந்த 10 மற்றும் 11ம் திகதிகளில் திருகோணமலை இந்துக்கல்லூரி மைதானத்தில் திரு.மார்ட்டீன் G.ஜெயகாந்த் தலைமையில் சிறப்பாக நடாத்தி முடித்தனர். ‘Trincomalee Super 40’ மற்றும் ‘ ‘Batticaloa Masters’ ஆகிய கழகங்களுக்கிடையில் இரண்டு நாட்களில் 20 க்கு 20 ஓவர்கள் என்ற அடிப்படையில் இவ்விரு போட்டிகள் நடாத்தப்பட்டதோடு அப்போட்டிகளில் இவ்விரு அணியினரும் […]
மஹரகமவில் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் குறித்த தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை (12:02:2024) கொழும்பில் இருந்து வருகை தந்த பேருந்து யாழ் எழுதுட்டுவாழ் பொலிஸ் இராணுவ சோதணை சாவடிக்கு முன்னால் உழவு இயந்திரத்துடன் மோதுண்டு கோர விபத்திற்குள்ளாகியுள்ளது.!!!! குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு பளை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...