வெடுக்குநாறிமலையில் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியினை பொலிசார் கலைத்தமையால் ஆலய வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. வெடுக்குநாறிமலையில் இன்றையதினம் சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்ளச்சென்ற பொதுமக்களுக்கு பொலிசாரால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களுக்கு குடிதண்ணீரை கொண்டு சென்ற நீர்தாங்கி பொலிசாரால் இடைவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் 5கிலோமீற்றர்கள் நடந்துசென்ற பொதுமக்கள் நீர் இன்றி அசௌகரியத்தை எதிர்கொண்டனர். இதேவேளை ஆலய வளாகத்தில் ஐஸ் கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை பொலிசார் விற்பனையில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்து ஆலயவளாகத்தை விட்டு […]
கொழும்பு – புறநகர் பகுதியான இரத்மலானையில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவுப் பொருளில் கரப்பான் பூச்சிகள் இருந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அந்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்ற நபர் சிற்றுண்டிகளை வாங்கியுள்ளார். எனினும், வாங்கிய சிற்றுண்டியில் உயிரிழந்த நிலையில் கரப்பான் பூச்சிகள் இருந்ததை அவதானித்த அந்த நபர் குறித்த உணவகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். எனினும், அதற்கு உரிய பதில் வழங்கப்படவில்லை என அந்த நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டின் பல […]
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் குளிர்களி வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே நேற்று (14) குளிர்களி குடிக்க சென்றவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...