Tag: கரையொதுங்கிய

HomeTagsகரையொதுங்கிய

வடமராட்சி கிழக்கு கடலில் கரையொதுங்கிய மிதவையால் பரபரப்பு!

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்திரெட்டிக்கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று 16.03.2023 காலை கரையொதுங்கியுள்ளது. பரமேஸ்வரி என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

கட்டைக்காட்டில் கரையொதுங்கிய மர்மக் கூட்டை JCB,உழவு இயந்திரம் கொண்டு அகற்றிய கடற்படை..!{படங்கள்}

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில்22.02.2024 வியாழக்கிழமை  கரையொதுங்கிய  இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரத்தை  JCB,உழவு இயந்திரம் கொண்டு கடற்படையினர் அகற்றினர். மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற போது  இதனை அவதானித்த கட்டைக்காடு  மீனவர்கள்  தங்களது முயற்சியால் கரைக்கு கொண்டுவந்தனர். கரையில் இருந்து குறித்த கூடாரத்தை அப்புறப்படுத்தும் மீனவர்களின் முயற்சி தோல்வியுற்றதால் JCB,உழவு இயந்திரம் கொண்டு வெற்றிலைக்கேணி கடற்படையினர் அதனை இன்று23.02.2024 வெள்ளிக்கிழமை அகற்றியுள்ளனர். கடற்படையுடன் இணைந்து கட்டைக்காடு மீனவர்களும் கூடாரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

சற்று முன் கரையொதுங்கிய ஒரு மாணவனின் சடலம்..!{படங்கள்}

காணாமல்போன  சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற  மாணவனின் உடல் இன்று காலை   கரையோதுங்கியுள்ளது. மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சம்பவதினம் மாளிகைக்காடு – சாய்ந்தமருது பகுதியை  சேர்ந்த இரண்டு மாணவர்களே புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர். 15 வயதுக்குட்பட்ட 08  பாடசாலை  மாணவர்கள்  தொழுகையை முடித்துக்கொண்டு, துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர் – ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது  இவ்வனர்த்தம் […]

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...