சர்வதேச அரசியல் ஆய்வாளர் அலன் கீனன் அவர்களுக்கும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருக்கும் இடையில் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும், சர்வதேச அரசியல் ஆய்வாளர் அலன் கீனனுக்கும் இடையில் முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்றையதினம் (17.03.2024) கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் நிலை , சமகால அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்வஞ்சல் பாண்டே (Dr.Satvanjal Pandey) உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல், காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி மின்னுற்பத்தியை மேற்கொள்ளுதல் மற்றும் வடக்கில் முன்னெடுக்கக்கூடிய ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது.
சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்பகட்ட கள ஆய்வில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை நேற்று (11.03.2024) மாலை சந்தித்து கலந்துரையாடினர். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் பொருளாதார துறையின் முதலாம் நிலை செயலாளரின் தலைமையில் குறித்த நிபுணர்கள் குழாம் கௌரவ ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண மக்களின் தற்போதைய வாழ்வியல் செயற்பாடுகள், பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுலாத்துறை, உட்கட்டமைப்பு வசதிகள், சமுத்திர பாதுகாப்பு, கடற்றொழில் செயற்பாடுகள், கண்ணிவெடி அகற்றுதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம், கௌரவ ஆளுநரிடம் கேட்டறிந்துக்கொண்டனர்.
இன்று 05.03.2024 , புதன்கிழமையன்று யாழ்ப்பாண மாவட்ட ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு , வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் , கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் வடக்கு மாகண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. பொ. வாகீஷன் , யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், பல் துறை சார் அரச உயர் அலுவலர்கள் […]
இந்தியாவின் நாகப்பட்டினத்தையும் திருகோணமலை எண்ணெய்க் குதத்தையும் இணைக்கும் வகையில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குழாய் அமைக்கும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எரிசக்தி வாரத்தினை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக இந்தியாவிற்கு சென்றுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர உத்தேச எண்ணெய்க் குழாய் நிர்மாணப் பணிகள் தொடர்பில் இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் நேற்று முன்தினம் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இந்திய அரசாங்கம் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் ஊடாக இந்த திட்டத்தினை முன்மொழிந்துள்ளது என எரிசக்தி அமைச்சர் […]
பால்நிலை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்டச்செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலமையில் நடைபெற்றது
இக்கலந்துரையாடலில் வைத்தியர்கள், அரச அதிகாரிகள், சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்த்தர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகஸ்த்தர்கள்...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...