ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் (28) கிண்ணியா மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்தார். இதன்போது, தௌபீக் எம்.பியின் கோரிக்கைக்கமைவாக அவசர திருத்தவேலைக்காக கல்வி அமைச்சினால் ஓதுக்கிடு செய்யப்பட்ட மூன்று மில்லியன் ரூபாய்க்கான திருத்தப்பணிகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், பாடசாலையின் தேவைகளை பாரளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்ததுடன் விரைவில் தீர்வை பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்ததார் இக்கலந்துரையாடலில், அதிபர் நஜாத், பிரதி அதிபர் கியாஸ், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஹம்சாத் மற்றும் அசிரியர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 7:30 மணிக்கு கல்லூரிக்கு முன்பாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்காத வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 208 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க ஒரு ஆண்கள் பாடசாலையில் முதல் முறையாக பெண் அதிபரை நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அத்தோடு கல்லூரியின் அதிபராக செயற்பட்ட எஸ்.இந்திரகுமாரை மீண்டும் நியமிக்குமாறு […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...