Tag: கார்

HomeTagsகார்

இளம் குடும்பஸ்தரின் கொலைக்கு பயன்படுத்திய கார் அராலியில் மீட்பு!

23 வயதுடைய தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தர் நேற்றுமுன்தினம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இருந்து கடத்தப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை குற்றச்சாட்டின் கீழ் ஐந்து சந்தேகநபர்கள் நேற்றையதினம், யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸாரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கார் அராலி மேற்கு நொச்சிக்காட்டு பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸாரும் தடயங்களை சேகரித்து வருகின்றனர். குறித்த குடும்பஸ்தர் மீது, காரில் வைத்தே தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாவனையற்ற வீடு ஒன்றிற்கு முன்னால் இருந்து இந்த கார் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காரானது நீண்ட காலம் பாவனை இல்லாமல் இருந்தது போல் தூசிபடிந்தவாறு காணப்படுவதுடன், காரின் உள்ளே இரத்தக்கறையும், கொட்டன்களும் காணப்படுகிறது.

சற்று முன் நிறுத்தி வைக்கப்பட்ட கார் தீக்கிரை..!

வாதுவை, பொத்துப்பிட்டிய காலி வீதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று  தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (13) பகல் இடம்பெற்றுள்ளது. களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவைச் சேர்ந்த  தீயணைப்பு வீர்ரகள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார்க் கடையினுள் புகுந்தது ஏ-35 பிரதான விதியின் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் ஒன்று இன்றைய தினம் மாலை 5.40 மணியளவில் விசுவமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகிலே இருந்த கடையின் முன்பகுதியில் நிறுத்தி பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு வந்த வாடிக்கையாளர்கள் நிறுத்தி வைத்திருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் , ஒரு துவிச்சக்கரவண்டி மற்றும் முச்சக்கரவண்டி என்பனவற்றை மோதி […]

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் செலுதிய கார் பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதியது

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் செலுதிய கார் மோதியதால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து கொழும்பு நெலும்பொகுன பகுதியில் இருந்து சுதந்திர சதுக்கத்திற்கு செல்லும் வழியில்...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...