நாடளாவிய ரீதியில் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகளவான எடை குறைந்த மற்றும், உடல் ஊனமுற்ற சிறுவர்கள் பதிவாகியுள்ளனர் எனவும் குடும்ப சுகாதார பணியக அதிகாரி வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ஹம்பாந்தோட்டை மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் இவ்வாறானதொரு நிலை காணப்படுவதாகவும், அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தாலும் எவரும் அதனை கருத்திற்கொள்ளவில்லை […]
வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளின் போது மாணவர்கள் அதிகளவில் தண்ணீர் அல்லது ஏனைய பானங்களை அருந்துமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். இதன்போது வியர்வையுடன் அதிக சோடியம் வெளியேறுவதால், ஆரஞ்சு, இளநீர், தேங்காய் தண்ணீர், கஞ்சி, ஆரஞ்சு சூப் போன்ற பானங்களை அதிகளவில் பருகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வயல்வெளிகளில் வேலை செய்பவர்கள், வீதிகளில் வேலை செய்பவர்கள், இராணுவத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் […]
வெப்பமான காலநிலை காரணமாக குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்
பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளின் போது மாணவர்கள் அதிகளவில் தண்ணீர் அல்லது ஏனைய பானங்களை அருந்துமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்...
ஆராச்சிக்கட்டுவ மய்யாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் தனது குழந்தையையும் மற்றுமொரு குழந்தையையும் மேலதிக வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் சைக்கிள் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கையில் வருடாந்தம் 250 முதல் 300 புற்று நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பதாக மஹரகம வைத்தியசாலையின் சிறுவர் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் சஞ்சீவ குணசேகர தெரிவித்துள்ளார். சிறுவர் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அங்கு கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா, 2021ஆம் ஆண்டில் 578 ஆண் குழந்தைகளும் 454 பெண் குழந்தைகளும் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய […]
யாழ்.போதான வைத்திசாலையில் கடந்த வருடம் 5 ஆயிரத்து 510 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அதில் 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகம பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவருக்கு 6 ஆண் பிள்ளைகள் பிறந்துள்ளதாக...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...