யாழ்ப்பாணத்தில் இன்று (15) அதிகாலை முச்சக்கர வண்டியில் பயணித்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகருக்கு அண்மையாக இன்று அதிகாலை 2 மணியளவில் முச்சக்கர வண்டியில் பயணித்த 5 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்யூஸ் வீதியை சேர்ந்த 25 வயதான முச்சக்கர வண்டி சாரதி, கொக்குவிலை சேர்ந்த 25 வயதான இளைஞன், யாழ்ப்பாண நகரத்தை சேர்ந்த 20 வயதான இளைஞன், குருநகரை சேர்ந்த 26 […]
இந்து, சைவ மக்களின் விசேட வழிபாட்டிற்குரிய சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், குறித்த சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறிந்து, தேசிய நல்லிணக்கத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொளள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் திகதி இரவு நேர சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரவு நேரத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட முடியாது என்று தெரிவித்த பொலிஸார், வழிபாடுகளை தடுத்து நிறுத்தியதுடன் ஆலய நிர்வாகத்தினர் எட்டுப் பேரை கைது செய்து தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்களின் தலைமையில் ஐவரடங்கிய குழு இன்று (01.03.2024) நியமிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கையின் பிரகாரம் நேற்று (29.02.2024) நடைபெற்ற கூட்டத்தில், பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து உரிய […]
யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று பேர் கொண்ட சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் குழுவினர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
இவர்கள் ஏற்கனவே தமது துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்த நிலையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம்...
மாந்தை கிழக்கு பிரதேசத்தின் 2024 ஆம் ஆண்டின் 1வது காலாண்டுக்கான பிரதேச விவசாயக்குழுக் கூட்டம் 27.02.2024 செவ்வாய் கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது மாந்தை கிழக்கு பதில் பிரதேச செயலாளர் இராமதாஸ் ரமேஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது தற்போது வடக்கில் அறுவடை நடவடிக்கைகள் முடிவடைவை நெருங்கியுள்ள போதிலும் சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கப்பட உள்ளன இதேவேளை தற்போது பெரும்போக அறுவடை நடவடிக்கையில் நெற்கதிர்களுக்கு ஏற்பட்டிருந்த தத்தி தாக்கங்கள் […]
குருநாகல் கலவன் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் ஆறாம் தரம் பயிலும் மாணவிகள் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திய விசாரணையில் சந்தேகத்திற்குரிய ஆசிரியரினால் மாணவிகள் குழு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்துமாறு பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து வந்த முறைப்பாட்டை அடுத்து குருநாகல் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.ஆர். ரத்நாயக்கவின் கோரிக்கைக்கு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் குருநாகல் மாவட்ட அலுவலகம் […]
குருநாகல் கலவன் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் ஆறாம் தர மாணவிகளை தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திய விசாரணையில் சந்தேகத்திற்குரிய ஆசிரியரினால் மாணவிகள் குழு...
யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் நேற்றையதினம் வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது. 44 மற்றும் 45 வயதான சகோதரர்களே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர். காயமடைந்த இருவரும் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பபட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (22) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இருவரிடையே ஏற்பட்ட முரண்பாடே வன்முறைக்கான காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி பொலிஸார், […]
யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் பங்கேற்புடன் இன்றையதினம் (16) இடம்பெறுகிறது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறும் இக்கூட்டம் காலை 9 மணியளவில் ஆரம்பமானது. யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு தரப்பினர் என பலரும் கூட்டத்தில் […]
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (15.02.2024) பிற்பகல் 3.30 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந் பாராளுமன்ற உறுப்பினர்களது பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் […]
வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் பிக்குககளும், தொல்பொருள் திணைக்களமும், இராணுவமும் மீண்டும் வந்துள்ளனர். சிவலிங்கத்தின் பக்கத்தில் சப்பாத்துகளுடன் நின்று மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். இராணுவ பாதுகாப்புடன் வருகைதந்த பிக்கு குழு ஆலய வளாகத்தை பற்றி கலந்துரையாடியததோடு இந்து கோயிலின் சின்னங்களை அவமதிக்கும் வகையில் மிகவும் கீழ்த்தரமாக சப்பாத்துக்காலுடன் நடந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...