அண்மைக் காலமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளின் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவ்வாறான விபத்துக்களில் உயிர்களும் பறிபோயுள்ளன. இந்நிலையில் இன்றையதினம் திருகோணமலை – யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும், வவுனியா – யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று செருகியவாறு பயணத்தை மேற்கொண்டன. இதன்போது பயணிகள் மிகவும் அச்சத்தில் இருந்ததை அவதானிக்க முடிந்தது. எத்தனையோ விபத்துக்கள இடம்பெற்ற போதும், சாரதிகளும், பொறுப்பான அதிகாரிகளும் அசமந்தமாக செயற்பட்டு பயணிகளின் உயிர்களுடன் […]
குழந்தைகளை கையில் ஏந்தியவாறு ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு பெண்களையும் அவற்றை கொள்வனவு செய்ய சென்ற மூன்று நபர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை , எகொடஉயன பிரதேசத்தைச் சேர்ந்த 35 மற்றும் 24 வயதுடைய இரு பெண்களும் அம்பலாங்கொடை, பலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மூன்று நபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...