Tag: சட்டவிரோத

HomeTagsசட்டவிரோத

மட்டு ஏறாவூர்; மீன்பிடி அதிகாரிகள் முற்றுகையிட்டு 22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெருமளவிலான சட்டவிரோத வலைகள் 3 தோணிகள் கைப்பற்றல்..!{படங்கள்}

மட்டக்களப்பு ஏறாவூர் கடற் கரைப்பகுதியில் மீன்பி அதிகாரிகள் கடற் படையினருடன்  இணைந்து தடை செய்யப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி  சோதனை நடவடிக்கை ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை மேற் கொண்டதில்  22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெரும் தொகை சட்டவிரேத சுருக்குவலைகள் 3 தோணிகளை கைப்பற்றியுள்ளதாக கடற்றொழில் நீரியல் நீரியல் வழங்க திணைக்க மீன்பிடி அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டத்தில் சிலர் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுவருவதாக மீனவர்கள்  முறைப்பாடு செய்து வந்தனர். […]

மட்டு ஏறாவூர்; மீன்பிடி அதிகாரிகள் முற்றுகையிட்டு 22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெருமளவிலான சட்டவிரோத வலைகள் 3 தோணிகள் கைப்பற்றல்

மட்டு ஏறாவூர் கடற் கரைப்பகுதியில் மீன்பி அதிகாரிகள் கடற் படையினருடன்  இணைந்து தடை செய்யப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி  சோதனை நடவடிக்கை ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை மேற் கொண்டதில்  22 அரை...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர் கைது

சட்டவிரோதத் தொழிலான ஒளி பாய்ச்சி கடலில் தொழில் செய்து கொண்டிருந்த மீனவர் ஒருவர் நேற்றுப் பிற்பகல் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலில் சுற்றுக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வெற்றிலைக்கேணி கடற்படையினர் கட்டைக்காட்டு கடற்பரப்பில் ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த அதே பகுதியை சேர்ந்த 23வயதுடைய நபர் ஒருவரே உடமைகளுடன் கைது செய்யப்பட்டார். ‘ கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி- சந்தேகநபர் கைது.!

கிளிநொச்சி, தருமபுரம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை கோரைமூட்டை பகுதியில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர், தருமபுர பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்றைய தினம் 05.02.2024கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிந்து 2468 போத்தல் கோடாவும்   கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்  இன்றைய தினம் 06.02.2024 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பொழுது  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்  என தருமபுரம்  பொலீஸ்  நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கில் மீண்டும் சட்டவிரோத சுருக்குவலை தொழில்.!

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை தொழில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. சிறுகண் உடைய வலையை பயன்படுத்தி பல படகுகள் உதவியுடன் ஒளி பாய்ச்சி பல்லாயிரக்கணக்கான குஞ்சு மீன்களை பிடித்து அழிப்பதாகவும் இதனால் சிறுதொழிலாளர்களுடைய வாழ்வாதாரம்...

கண்டாவளையில் சட்டவிரோத மண் அகழ்வு! அதிகாரிகள் அவதானிப்பு..!!

கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேசத்தில், பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியை அண்மித்து சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், சம்பவ இடத்தை நேரில்சென்று பார்வையிட்டார். குறித்த பகுதியில் மணல் மாபியாக்கள்...

சட்டவிரோத மீன்பிடிக்கு அரசாங்கம் அனுமதித்துள்ளதாக கிழக்கில் குற்றச்சாட்டு

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுபட மீனவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி திருகோணமலையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் மாவட்ட காரியாலயத்திற்கு முன்பாக...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...