மலையக மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்து வருவதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் மொத்த மற்றும் சில்லறை விலைகளில் பெருமளவில் அதிகரித்துள்ள மலையக மரக்கறிகளின் விலைகள் தற்போது வழமை நிலையை அடைந்துள்ளதாகவும், இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் மரக்கறிகள் எனவும் நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மலையகத்தில் நிலவும் நல்ல காலநிலை காரணமாக திட்டமிட்டபடி அறுவடை கிடைத்துள்ளது. எதிர்வரும் சிங்கள இந்து புத்தாண்டு காலம் […]
யாழ்ப்பாணத்தில் நெடுந்தூர பேருந்து சேவைகளுக்கு முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்று ( 28.02.2024 ) முதல் தனியார் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனை மரியாதை நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள சிறீதரனின் இல்லத்தில் இக்கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனுக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதன்போது நீர் வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
07ஆவது இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஇ அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களை சந்தித்தார். இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார நவீனமயமாக்கல் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம்இ சுற்றுலா மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற துறைகளில் அரசாங்கத்திற்கு உதவ விரும்புவதாக கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்தனர். இதேவேளைஇ இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் […]
தாம் எதிர்கொள்ளும் இறங்குதுறைப் பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்.சாவல்கட்டு மீனவர்கள் இன்று வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சரிடம் கலந்துரையாடி சரியான தீர்வைப் பெற்றுத்தருவதாக ஆளுநர் தமக்கு உறுதியளித்துள்ளதாக மீனவர்கள் ஊடகங்களுக்கு தெவித்துள்ளனர். இறங்குதுறை பிரச்சினைக்கு தீர்வு கோரி சாவல்கட்டு மீனவர்கள் கடந்த 06ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக […]
2024 பெப்ரவரி 7 ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான ‘சமர் அலி’ – ‘லிகான் ஓமா’ ஆகிய இருவருடனும் – அதன் பின்னர் – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான ‘டொன் டேவிஸ்’ என்பவருடனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். காங்கிரஸ் உறுப்பினர்களான சமர் அலி – லிகான் ஓமா ஆகிய இருவரும் அமெரிக்காவின் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் மிகவும் முற்போக்குவாத இளம் அரசியல் தலைவர்களாவர். இளைஞர்கள் மட்டத்தில் […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...