ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர் சுலைமான் அல்அமீரி (H.E. Khaled NasserSulaiman AlAmeri), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று (01.03.2024) மாலை இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய புதிய முதலீடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் உள்ளிட்ட […]
ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர் சுலைமான் அல்அமீரி (H.E. Khaled NasserSulaiman AlAmeri), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில்...
அச்சுவேலி சென்திரேசா மகளிர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்டது குறித்த சந்திப்பில் சமூக நிலையிலிருந்து தற்போது மக்கள் மாறிவரும் போக்கு காணப்படுகிறது எனவே மக்களை மீண்டும் சமூகமயமாக்கும் நோக்கத்தில் குறித்த சந்திப்பு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் தமக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை தாமே இனங்கண்டு அதனை ஏற்றுக் கொண்டு அவற்றை சமூகமாக இணைந்து தீர்வு காணும் வகையில் செயற்படுவதற்காக குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்தார். மேலும் மக்கள் தற்போது பல்வேறு வகையான பிரச்சனைகளை […]
கல்வி அமைச்சு மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் விதிகளுக்கு அமையவே அதிபர் நியமனம் இடம்பெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என யாழ் மத்திய கல்லூரியின் பழையயமானவர் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ் மத்திய கல்லூரியின் அதிபர் நியமனம் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் போதே மேற்கண்டவாறு பழைய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:- யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் என்பது 1909 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. […]
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் வடக்கு மாகாணத்தில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகளை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள திருமறை கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.டீ.பி.தெஹிதெனிய, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமால் புஞ்சிஹேவா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் , வலிந்து கானாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் […]
ஜேர்மன் நாட்டின் மிசறியோ நிறுவன இலங்கைக்கான பொறுப்பதிகாரி கொரினா பிறோக்மன் அவர்கள் கரித்தாஸ் கியூடெக் நிறுவன செயற்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் மிசறியோ நிறுவன ஆலோசகர் உல்றைக் வைன்ஸ்பாஜ்ச், கரித்தாஸ் கியூடெக் தேசிய இயக்குநர் அருட்தந்தை லூக் நெல்சன் பெரேரா, சமாதான நிகழ்ச்சி […]
தேசிய மக்கள் சக்தியினருக்கும் ஜனநாயகபோராளிகள் கட்சியினருக்குமான சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் யாழ்பாணம் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தியின் வடமாகாண அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களும் யாழ் இணைப்பாளர் k.இளங்குமரன் அவர்களும் ஜனநாயகபோராளிகள் சார்பில் தலைவர் சி.வேந்தன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சமகால தேசிய பிராந்திய சர்வதேச அரசியல் நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.குறிப்பாக இலங்கையில் தமிழ் மக்கள் தற்போது அனுபவித்து வருகின்ற அத்துமீறிய நில ஆக்கிரமிப்பு எல்லைதாண்டி […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...