வெலிகம பேருந்து நிலையத்திற்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த ஒருவர் மீது லங்கம பேருந்து மோதியதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். வெலிகம பெனேடியன பிரதேசத்தைச் சேர்ந்த அவர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான சிசிரிவி கெமராவில் பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.
கொழும்பு – ஜம்பட்டா தெரு பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு ஆங்கில மொழி வழிகாட்டல் மற்றும் தொழில்சார் பாடம் ஒன்றை இலவசமாகக் கற்பதற்கு அடுத்த மாதம் ஐந்தாம் திகதி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் தோற்றிய மாணவர்களுக்கும் அதே வகையான பயிற்சித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடித் திட்டம் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதற்கமைவாக ஆசிரியர்களுக்கான பயிற்சியும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றார். காலியில் இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சரவையின் அனுமதியின்றி வௌியிடப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட வீசா நீடிப்புகளை இரத்து செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூபாயின் பெறுமதி வலுவடைந்தமையின் பிரதிபலனை அடுத்த மாதம் முதல் நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி கடந்த சில மாதங்களாக படிப்படியாக வலுவடைந்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்தமையின் பலன், மார்ச் முதல் வாரத்தில் இருந்து பொதுமக்களுக்கு கிடைக்கும் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் […]
கலன்பிந்துனுவெவ – கதலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதியும், பின்னால் அமர்ந்து சென்றவரும் சிகிச்சைக்காக கலன்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ராஜாங்கனை தெற்கு பகுதியை சேர்ந்த 19 வயதுடையவர் என […]
வரிப் பதிவில் டின் இலக்கம் வழங்கும் யோசனையை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு அதே இலக்கத்தையே தகரம் இலக்கமாகப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்து அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான பிரேரணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதற்காக 6 நிறுவனங்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும் இதுவரை 4 நிறுவனங்கள் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக […]
நாடு முழுவதிலும் 40,000க்கும் அதிகமானோர் போலி வைத்தியர்களாக செயற்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் உள்ளவர்களில் 65 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார். அதேபோல், போதைப்பொருள் குற்றங்களுக்காக 1000 முதல் 1500 வரையான சிறுவர்கள் சிறைச்சாலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காலி நாகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க இதனை தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த விபத்து இடம்பெற்றது. உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம், நீர்வேலியில் நேற்று (21) விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன், வீடொன்றில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு வாகனத்துக்கு தீவைத்து விட்டு திரும்பியபோதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் நேற்று அதிகாலை நாய் குறுக்காக ஓடியதால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தார். யாழ் பல்கலைக்கழகத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மானிப்பாய் வேம்படி பகுதியைச் சேர்ந்த ரமேஸ் சகீந்தன் (22) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். மாணவன் உயிரிழந்த […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...