யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே 20 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் அந்த பெண் கைதாகியுள்ளார். சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்னால் இருந்து பயணித்த பயணியின் சேலையானது மோட்டார் சைக்கிள் சில்லில் சிக்குண்டதால் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவமானது இன்று காலை அராலி பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்
யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து வென்னப்புவ பொலிஸ் நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கர வண்டியில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்படும் போது சந்தேகநபரான பெண், 02 ஹெரோயின் கட்டிகளை விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சந்தேக நபரான அப்பெண் மாரவில சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அப்பெண் வாந்தி எடுத்தார். அப்போது, 01 கிராம் ஹெரோயின் கட்டிகள் 2 வெளியில் […]
வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை முன்னெடுத்தனர். கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கடந்த 16.02.2024 வெள்ளிக்கிழமை மாமுனை கடற்பகுதியில் இருந்து சட்டவிரோத கணவாய் கொப்புகளை ஏற்றிக் கொண்டு கடலுக்கு செல்ல முற்பட்ட போது ஆறுபேர் படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகளை குறுகிய காலத்துக்குள் கட்டுக்குள் கொண்டுவருவதாக உறுதியளித்த கடற்படையினர் தொடர்ந்து கடல்,தரை என திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பலரை கைது செய்து வருகின்றனர். […]
ஹொரணை - பாணந்துறை வீதியின் குல்பான பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மூன்று வயது மகள் ஆகியோர் பயணித்த...
மன்னாரில் மீனவர் வலையில் மிகவும் அபூர்வமும் ஆபத்து நிறைந்த விலாங்கு மீன் என அழைக்கப்படும் பாம்பு மீன் ஒன்று சிக்கியுள்ளது.
இன்றைய தினம் (7) மீன் பிடியில் ஈடுபட்ட நிலையிலேயே குறித்த மீனவரின் மீன்...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...