யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ், சிறுவர் மற்றும் பெண்கள் தடுப்பு பணியகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான சனத்தொகை நிதியத்தின் (UNFPA) ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பாய் ஸ்மித் (Poi Smith) குறிந்த அலுவலகத்தை திறந்து வைத்தார். யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. இன்றைய நிகழ்வில், ஐக்கிய நாடுகளுக்கான சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குனே அடேனி (Kune Adeni), யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், பொலிஸ் அதிகாரிகள் […]
கொழும்பு லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களது பெற்றோரின் கையடக்கத் தொலைபேசிகளை 7 வயது சிறுமியை வைத்து திருடிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் கையடக்கத் தொலைபேசிகளை திருடி தாயிடம் கொடுக்காவிட்டால் தனது தாய் தன்னை தாக்குவதாகவும் திருடிய கையடக்கத் தொலைபேசிகளை தனது தாய், தந்தையிடம் கொடுப்பதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை ஒன்றின் தாயின் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றும் […]
திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் ஒருவரால் மிலேச்சத்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 9ஆம் தரத்தில் கல்விபயிலும் மாணவன் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பான ஆசிரியர் மாணவனை அழைத்துள்ளார். எனினும் மாணவன் அந்த இடத்துக்குச் செல்லாததையடுத்து கோபமடைந்த ஆசிரியர் உடலில் காயங்கள் ஏற்படும் வகையில் மாணவனைப் பெரிய தடியால் தாக்கியுள்ளார். இதனால் சிறுவனின் கைகளில் இரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிறுவர் இல்ல மாணவன் என்று தெரிந்தும் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் […]
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சுமார் 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இவற்றில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 2,242 முறைப்பாடுகள், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 472 முறைப்பாடுகள், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 404 […]
இணுவிலில் உள்ள சிறுவர் விருத்திமைய மாணவர்களின் கலை விழா, இணுவில் பொது நூலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றது. நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள், காவடி நடனம், கிராமிய நடனம், உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகளும் அதனைத் தொடர்ந்து பட்டமளிப்பு வைபவமும் இடம்பெற்றது. ம.கஜந்தரூபன் அவர்கள் தலைமை தாங்கிய இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ச.கிருபானந்தன், நா.கிருபாகரன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக சி.அழகேசன், […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...