Tag: சிறை

HomeTagsசிறை

இந்தியாவிலிருந்து படகை மீட்க வந்த படகின் உரிமையாளருக்கு சிறை

இலங்கையில் பிடிபட்ட தமிழக கடற்றொழிலாளர்களின் படகை மீட்க, இந்தியாவிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வந்த படகின் உரிமையாளரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மன்னார் கடற்பரப்புக்குள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மூலம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்களின் படகுகள் நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தன. அந்தப் படகுகளுக்கான விசாரணை நேற்றையதினத்துக்குத் (20) திகதியிடப்பட்டிருந்தது. இவ்வாறு திகதியிடப்பட்ட இரு […]

கள்ளத் தேங்காய் பறித்தவருக்கு 5000 ரூபாய் தண்டம்-கட்டத் தவறியதால் 3 வருடம் சிறை..!

5 ஆயிரம் ரூபா அபராதத்தை செலுத்த தவறியதால் 3 வருட காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபரை விடுவிக்க களுத்துறை சிறைச்சாலை நலன்புரிச் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் மத்துகம பிரதேசத்தை சேர்ந்த எம்.எச். வசந்த என்ற நபராவார். இவர் வெளிநாட்டவர்களது காணியில் சட்டவிரோதமாக 20 தேங்காய்களை பறித்தாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இவர் குறித்த அபராதத்தை செலுத்த தவறியதால் 3 […]

மாந்தீவில் புதிய சிறை..!

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகருக்கு அருகில் கடலில் அமைந்துள்ள மாந்தீவில் புதிய சிறைச்சாலை அல்லது புனர்வாழ்வு நிலையத்தை நிறுவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (23) மாந்தீவை பார்வையிடுவதற்காக சென்ற போதே அமைச்சர் இந்த தகவலினை தெரிவித்தார். மாந்தீவு சுமார் 100 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாந்தீவில் தற்போது 2 தொழுநோயாளிகள் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கொவிட் காலத்தில் இலங்கை விமானப்படையால் […]

தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் சிறை..!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதான கடற்தொழிலாளர் ஒருவருக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று , 18 பேருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்து , அதனை 05 வருட கால பகுதிக்கு ஒத்திவைத்துள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 07ஆம் திகதி 19 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதுடன் , அவர்களின் இரு படகுகளும் கைப்பற்றப்பட்டன. கைதான கடற்தொழிலாளர்கள் மறுநாள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் […]

பொதுப் போக்குவரத்தில் அத்துமீறினால் ஐந்துவருட சிறை.!

பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. குற்றவியல் சட்டத்தின் 345ஆம் பிரிவுக்கு அமைய, இந்த சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், சிவில் உடையில் உள்ள பொலிஸார் அவர்கள் தொடர்பில் கண்காணிப்பதுடன், தமது கமராக்கள் மூலம் […]

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பூசகருக்கு கடூழிய சிறை தண்டனை!

கிளிநொச்சி – பளையில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட பூசகரை, 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எட்டு வருடங்களுக்கு பின் இந்த வழக்கின் தீர்ப்பு, கிளிநொச்சி மேல்...

விவசாய பேப்பரை அவுட்டாக்கின வாத்திக்கு சிறை

உயர்தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பில் அம்பாறையைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள்...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...