Tag: சுகாதார

HomeTagsசுகாதார

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக சுகாதார ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (12) மதிய நேர உணவு இடைவேளையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர். நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார சேவையில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக இன்றையதினம் மதிய நேர உணவு வேளையில் சுமார் ஒருமணி நேரம் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் 72 தொழிற் சங்கங்களில் அங்கம் வகிக்கும் சுகாதார சேவை ஊழியர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் DAT கொடுப்பனவான 35 ஆயிரத்தை எமக்கும் தாருங்கள் என கேட்க்கவில்லை. மாறாக சுகாதார சேவையை முன்னெடுப்பவர்களின் சேவை, பதவி மற்றும் தகுதிகளுக்கு ஏற்றவாறு மேலதிக கொடுப்பனவை வழங்க அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு நடவடிக்கை […]

வடக்கில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ச அமைச்சருக்கு, வடக்கு ஆளுநர் எடுத்துரைப்பு..!{படங்கள்}

சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், கொழும்பு சுவசெரிபாயவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில் இன்று (05.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாணத்தில் சுகாதார துறைக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதால் சுகாதார துறையினர் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுனரால், சுகாதார அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது. வடக்கில் இதுவரை நிரப்பப்படாத ஆளணி மற்றும் ஆளணி வெற்றிடங்களுக்கான மாற்றீடுகள் தொடர்பில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் தீர்வு பெற்றுத்தரப்படும் என […]

முல்லைத்தீவில் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை-மக்கள் அவதி..! {படங்கள்}

முல்லைத்தீவில் இடம்பெற்ற சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன. இந்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது. இதன்போது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையிலேயே நேற்று காலை 6 மணிமுதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் […]

சுகாதார ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு-அவதியுறும் ஏழை மக்கள்…!

சுகாதார சேவை அலுவலர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் வைத்தியசாலை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டது. மருத்துவர்களின் DAT கொடுப்பனவு 35000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள தொகை 50000 ரூபாவாக உயர்த்தப்பட்டாலும் நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதற்காக எங்களிற்கு வழங்கப்படும் 3000 ரூபா அப்படியே உள்ளது. மருத்துவ அதிகாரிகளுக்கு 35000 ரூபாவாக கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில், தமது கொடுப்பனவை அதிகரிக்கும் நோக்கில், இடைக்கால மருத்துவ கூட்டுப் படை வாரியம் இன்றைய தினமும் காலை […]

யாழிலும் சுகாதார பணியாளர்கள் பணிபுறக்கணிப்பு..! {படங்கள்}

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெற்றது. 72 சுகாதார தொழிற்சங்கங்களைச் சேர்ந்த  ஊழியர்கள் இன்று(13) காலை 6.30 முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முடங்கியது சுகாதார சேவை-பேச்சுவார்த்தை தோல்வி.!

72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (13) காலை மீண்டும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வைத்தியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளை தமக்கும் வழங்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். படுதோல்வியில் முடிவடைந்த பேச்சுவார்த்தை நிதி அமைச்சு மற்றும் சுகாதாரத் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் […]

சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு – நுவரெலியாவில் சிவில் உடையில்  பணியாற்றும் ஊழியர்கள்..!

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.  இதற்கு ஆதரவாக நுவரெலியாவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களில் சிலர் சிவில் உடை...

சுகாதார அமைச்சருக்கு எதிராக முல்லைத்தீவில் கையெழுத்து திரட்டும் போராட்டம்

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கையெழுத்துப் போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்று(21.08.2023)புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...