யாழ்ப்பாணம் – வலி.வடக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள சிறு கோவிலில் சிவலிங்கத்தை வெள்ளை நாகம் சுற்றியிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை தெற்கு பகுதியில் உள்ள தகரங்களால் வேயப்பட்ட சிறு கோவிலிலேயே குறித்த காணொளி இராணுவத்தினரால் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறு அம்மன் கோவிலில் பிள்ளையார் , சிவலிங்க உருவச் சிலைகளும் இலட்சுமியின் உருவப்படமும் வைத்து காணப்படுகிறது. பௌர்ணமி தினங்களில் பாம்புகள் அடிக்கடி குறித்த ஆலயத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கும் இராணுவத்தினர் அவ்வாறு ஒரு முறை வந்தபோதே குறித்த காணொளியை எடுத்ததாகவும், குறித்த கோவில் அமைந்துள்ள காணி உரிமையாளர் கோவிலை கவனமாக பராமரிக்குமாறும் கோரி காணொளியை வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கபடுகிறது. இந்த இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் ஏற்றப்பட்ட வெற்று கொள்கலனில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். 26 வயதான மதி ராஜேந்திரன் மற்றும் 39 வயதான ஜெயக்குமார் தருமராசா […]
திடீர் சுற்றிவளைப்பில் கடந்த ஒரு மாதத்தில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது! கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக் களில் யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த வர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த சந்தேகநபர் களுக்கு நீதிமன்றங்களினால் பிடி யாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 301 நபர்களும், சாதாரண பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 230 நபர்களுமே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு […]
யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து வென்னப்புவ பொலிஸ் நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கர வண்டியில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்படும் போது சந்தேகநபரான பெண், 02 ஹெரோயின் கட்டிகளை விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சந்தேக நபரான அப்பெண் மாரவில சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அப்பெண் வாந்தி எடுத்தார். அப்போது, 01 கிராம் ஹெரோயின் கட்டிகள் 2 வெளியில் […]
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 596 ஆண்களும் 17 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட 342 சோதனை நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 332 ஆண்களும் 10 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 84 கிராம் ஹெரோயின் , 32 கிராம் ஐஸ் , 168 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. தென் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட 68 சோதனை நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 66 ஆண்களும் 2 பெண்களும் கைது […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...