அம்பாறை மாவட்ட பெரிய நீலாவணை பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மாற்றுத்திறனாளிகளான ஆண் பெண் ஆகிய இரு பிள்ளைகளின் கழுத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு அவரும் தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்து கொண்டு முயற்சித்த நிலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்ட சம்பவம் இன்று வியாழக்கிழமை (14) பகல் 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பெரிய நீலாவணை பொலிசார் தெரிவித்தனர். பெரிய நீலாவனை பாக்கியதுஸ் சாலிஹாத் வீதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான 29 வயதுடைய முகமது கலீல் […]
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று குறித்த ஆலயத்திற்குச் சென்ற பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.பொலிஸார் அங்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை(14) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, இந்த சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்பதை இல்லாது ஒழிப்பதற்காக பல்வேறு செயல் திட்டங்களை இலங்கை அரசாங்கம்,அதனுடன் சேர்ந்த திணைக்களங்கள் மற்றும் புத்த பிக்குகள் மிகவும் மோசமாக வன்முறையை உறுவாக்குவதற்காகவும் எமது இனத்தை இல்லாது ஒழிப்பதற்குமான செயல்பாட்டை செய்து வருகின்றனர். இந்த நிலையிலே,தற்போது உச்ச கட்டமாக சிவராத்திரி அன்று வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாட்டிற்காக சென்ற எம் உறவுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் மீது பொலிஸார் வன்முறையை உபயோகித்துள்ளனர். குறித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. என அவர் மேலும் […]
வாதுவை – பொஹத்தரமுல்ல கடற்கரை பகுதியில் போதைப்பொருளுடன் 17 வயது சிறுமியும் அவரது 30 வயதான காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வாதுவை பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமி மற்றும் 30 வயது இளைஞராவர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபரான சிறுமி ஹொரணை பிரதேசத்தில் மேலதிக வகுப்பொன்றில் கலந்து கொண்டு […]
நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட நிறைவேற்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயல் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 100 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வடமராட்சியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளை அலுவலகத்தில் MA.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றபோது இதனை தெரிவித்தார்.
கம்பளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தரகர்கள் ஊடாக அதிக போதை மாத்திரைகள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 160,000 ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை மற்றுமொரு நபருக்கு வழங்கிய போதே வைத்தியர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கெலிஓயா பிரதேசத்தை சேர்ந்த இந்த வைத்தியர், வைத்தியசாலை சேவைக்கு மேலதிகமாக பல பிரதேசங்களில் வைத்திய நிலையங்களை நடத்தி இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைத்தியர் இரவு நேரத்தில் […]
தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றை யாழில் ஆரம்பித்துள்ள நடிகை ரம்பாவின் கணவர், அந்த நிறுவனத்துக்காக யாழ் மண்ணில் தென்னிந்திய சினிமா கலைஞர்களை அழைத்து வந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். பாடகர் ஹரிகரனின் தலைமையில் இந்த இசை நிகழ்ச்சி நாளை மறுதினம் யாழ். முற்றவெளியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒருதொகுதி கலைஞர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளதோடு குறிப்பாக தமன்னா, யோகிபாபு, ஹரிகரன் உள்ளிட்ட கலைஞர்களை சந்திப்பதற்காக ஒரு நிகழ்வை நாளை ஏற்பாடு செய்துள்ளனர். ஒரு மணித்தியாலம் நடைபெறவுள்ள நிகழ்வுக்கு நுழைவுக்கட்டணமாக 30 […]
சுதந்திரத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்- பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கை
சுதந்திரத்தின் அர்த்தத்தினைக் கேலிக்கூத்தாக்கும் அரசாங்கத்தினால் நேற்று கிளிநொச்சியில் நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, மொழி, பிராந்திய வேறுபாடின்றிக் குரல்...
பண்டாரவளை, பிந்துனுவெவ பகுதியிலுள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட யுவதியொருவரின் சடலம் மீள தோண்டியெடுக்கப்பட்ட நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
பிந்துனுவெவ, படுலுகஸ்தென்ன பகுதியில் வாழ்ந்த 25 வயது யுவதியொருவர் (ரஷ்மிகா...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...