ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பொன்றை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நேரத்தில் அது நடத்தப்படும் என்றும், பொதுத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு என்றும், தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணையத்துடன் அரசு இணைந்து செயல்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் இவ்வருடத்தில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்று வரும் இந்து சமுத்திர பிராந்திய மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதியுடன் இந்திய செய்திச் சேவை இந்த நேர்காணலை நடத்தியது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தானும் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...